கிருபையின் ஆசீர்வாதங்கள்!

“எனக்கும் உமது ஜனங்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்த தென்பது எதினால் அறியப்படும்; நீர் எங்களோடே வருவதினால் அல்லவா?” (யாத். 33:16).

தேவ கிருபையினால் வரும் ஆசீர்வாதங்கள் எண்ணற்றவை. கர்த்தருடைய கண்களிலே உங்களுக்கு கிருபை கிடைக்குமானால், அவர் உங்கள் வாழ்க்கை முழுவதும் கடந்து வருவார். பூமியிலுள்ள சகல ஜனங்களிலும் உங்களை விசேஷ முள்ளவர்களா மாற்றுவார்.
“வாழ்க்கை” என்பது, ஒரு நீண்ட நெடுந்தூர பயணம். இந்தப் பயணத்தின் ஆரம்பத்தில் தா தகப்பன் அருகிலே இருப்பார்கள். சகோதர, சகோதரிகள் கூட வருகிறார்கள். பாதி வழியிலே, சில நண்பர்கள் வருகிறார்கள். ஆனால் கடைசி வரை சதாகாலங்களிலும் கூட, வருகிறவர் ஒரே ஒருவர்தான். அவர்தான் ஆண்டவராகிய கர்த்தர் மட்டுமே (மத்.28:20).

மோசே, தன்னுடைய எண்பதாவது வயதில், நீண்ட நெடுந்தூர பயணத்தை ஆரம்பித்தார். அவர்கள் நாற்பது வருடங்கள் வனாந்தரத்திலே நடக்க வேண்டும். அவரோடுகூட ஏறக்குறைய இருபது இலட்சம் இஸ்ரவேலர்கள், வந்து கொண்டிருக் கிறார்கள். அவர்களுக்கு அனுதினமும் உண்ண உணவும், உடுக்க உடையும், தண்ணீரும், தங்கி தாபரிக்க இடமும் கொடுக்க வேண்டும். இது எப்படி சாத்திய மாகும்? கிருபையினால்தான் சாத்தியமாகும்.

ஆகவேதான் மோசே சோன்னார், “எனக்கும், உமது ஜனங்களுக்கும், உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதினால் அறியப்படும்; நீர் எங்களோடே வருவதினால் அல்லவா?” இந்த உலகப் பயணத்திலே வரும்படி, உங்களுக்கும் கூட கர்த்தருடைய கண்களிலே கிருபை கிடைத்திருக்கிறது. கிருபையின் தேவன், உங்க ளோடுகூட பயணம் சேது வருகிறார். ஆம், தேவனுடைய பிள்ளைகளே, கர்த்தர் உங்களோடேகூட வருவாரானால், ஒருபோதும் தனிமை உணர்வோ, அனாதையைப் போல இருக்கிறேனே என்ற கண்ணீரோ, எல்லாராலும் கைவிடப்பட்டு இருக்கிறேன் என்கிற, துயர உணர்வோ உங்களை பாதிப்பதில்லை. தாழ்வு மனப்பான்மை, உங்களை சோர்ந்துபோகப் பண்ணுவதில்லை.
கர்த்தர் உங்களோடு வருகிறார் என்கிற உணர்வு தைரியத்தையும், தன்னம்பிக் கையையும், மகிழ்ச்சியையும் உங்களுக்கு ஏற்படுத்தும். கர்த்தர் கெம்பீரமானவரா, மகிமையானவரா, ஜெய கிறிஸ்துவா, தடைகளை நீக்கிப் போடுகிறவரா, கோணலானவைகளை சேவ்வையாக்குகிறவரா உங்களோடுகூட வருகிறார்.

அவர் உங்களோடு வரும்போது, தேவதூதர்கள், கேருபீன்கள், சேராபீன்கள் எல்லாரும் உங்களோடு வருகிறார்கள். மேகஸ்தம்பங்கள், அக்கினி ஸ்தம்பங்கள் உங்களோடுகூட கடந்து வருகிறது. உங்களுக்கு தண்ணீரைக் கொடுக்கும்படி ஞானக்கன்மலையும் கூடவே வருகிறது. சுருங்கச் சோல்லப்போனால், முழு பரலோகமுமே உங்களோடுகூட வருகிறது என்றுதான் அர்த்தம். தேவபிள்ளைகளே, கர்த்தர்கூட வரும்போது எந்தத் தீங்கும் உங்களை நெருங்க முடியாது. “தேவன் எழுந்தருளுவார், அவருடைய சத்துருக்கள் சிதறுண்டு, அவரைப் பகைக்கிறவர்கள், அவருக்கு முன்பாக ஓடிப்போவார்கள்” (சங். 68:1).

நினைவிற்கு:- “உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்த தானால், நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்; இந்த ஜாதி உம்முடைய ஜனமென்று நினைத்தருளும்” (யாத். 33:13).