உன்னை ஆசீர்வதிப்பேன்!

“நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்” (ஆதி. 26:3).

கர்த்தர் அன்போடு ஈசாக்கைப் பார்த்து, நல்ல ஒரு வாக்குத்தத்தத்தைக் கொடுத்தார். நான் உன்னோடுகூட இருப்பேன். மட்டுமல்ல, உன்னை நான் ஆசீர்வதிப்பேன். இந்த வாக்குத்தத்தத்தில் ஈசாக்கு, எவ்வளவு மகிழ்ந்திருக்க வேண்டும்! நீங்களும் இந்த வாக்குத்தத்தத்தை உங்களுக்குச் சோந்தமாக்கிக் கொள்வீர்களாக!

ஆபிரகாமோடு இருந்தவர், ஈசாக்கோடு இருந்தார். ஈசாக்கோடு இருந்தவர், யாக்கோபோடு இருந்தார். யாக்கோபோடு இருந்தவர், மோசேயோடு இருந்தார். தலைமுறை தலைமுறையாக நம்மோடு கூடவும் இருப்பார். நம்மையும், நம்முடைய சந்ததியையும் பார்க்கும்பொழுது, கர்த்தருடைய உள்ளத்திலே ஒரு எதிர்பார்ப்பு உண்டு. “இந்த சந்ததியை நான் எனக்கென்று ஏற்படுத்தினேன், இவர்கள் என் துதியைச் சோல்லி வருவார்கள்” என்பதே அந்த எதிர்பார்ப்பு. ஆகவே, நீங்களும் உங்களுடைய சந்ததியும், கர்த்தருடைய சுதந்தரமுமாக அவருடைய துதியைச் சோல்லி வருவீர்களாக!

கர்த்தர் மோசேயோடு பேசியபோது, “நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாகிய, உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன்” என்றார் (யாத். 3:6). அப்பொழுது மோசே, “கர்த்தருடைய நாமம் என்ன?” என்று கேட்டார். கர்த்தர் கொடுத்த பதில் என்ன தெரியுமா? “இருக்கிறவராக இருக்கிறேன்” என்பதாகும் (யாத். 3:14). ஈசாக்கோடு இருந்தது போல, உங்களோடு கூடவும் இருப்பார். ஒரு நாளும் உங்களை விட்டு விலகமாட்டார். ஒரு நாளும் உங்களைக் கைவிடவும் மாட்டார். “உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்” (மத். 28:20) என்பது, அவருடைய அன்பின் வாக்குத்தத்தம் அல்லவா?
நம் ஆண்டவர் வாக்குக்கொடுத்தால், அதை நிச்சயமாகவே நிறைவேற்றுவார். பொ உரைக்க, அவர் ஒரு மனிதனல்ல, மனம் மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல. அவர் இருக்கிறவராகவே, நம்மோடு கூட இருக்கிறவர்.

கர்த்தர் ஈசாக்கோடு இருந்தபடியினாலே, அவருடைய சத்துருக்கள் எல்லாம் அவரோடு சமாதானமாகும்படிச் சேதார். சேல்லுகிற இடங்களிலெல்லாம் கண்மணிபோல காத்துக்கொண்டார். மாத்திரமல்ல, ஈசாக்கு தன் தேசத்தில் விதை விதைத்தபோது, கர்த்தர் நூறு மடங்கு பலன் கிடைக்க கிருபை சேதார். அவர் நிச்சயமாகவே, உங்கள் கையின் பிரயாசத்தை ஆசீர்வதிப்பார். நீங்கள் இன்றைக்கு இருக்கிற நிலைமையைப் பார்க்கிலும், ஆயிரம் மடங்கு உங்களை ஆசீர்வதிக்கும்படி அவர் சித்தம் கொண்டிருக்கிறார் (உபா. 1:11). வானத்தின் பலகணிகளைத் திறந்து இடங்கொள்ளாமற்போகுமட்டும், உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் போகையிலும், வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்கள்.

கர்த்தர் ஈசாக்கோடுகூட இருக்கிறார் என்பதை கேட்டபொழுது, அங்கே இருந்த ராஜாவாகிய அபிமெலேக்கும், இன்னும் அவன் சேனாபதிகளும், ஈசாக்கை தேடி வந்து, “நிச்சயமா கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம். ஆகையால், எங்களுக்கும் உமக்கும் ஒரு ஆணை ஏற்பாடு உண்டாகவேண்டும் என்று நாங்கள் நிர்ணயம் பண்ணினோம். நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவராமே” என்றார்கள் (ஆதி. 26:28,29). தேவபிள்ளைகளே, உங்களுடைய வழி, கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், உங்களுடைய சத்துருக்களும், உங்களோடு சமாதானமாகும்படிச் சேவார் (நீதி. 16:7).

நினைவிற்கு:- “உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்” (சங். 91:1).