ஆசீர்வதிப்பேன்!

“உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன்; உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்” (ஆதி.12:3).

ஆபிரகாமுக்கு வேதத்திலே விசேஷமான ஒரு இடம் உண்டு. அவர் முற்பிதாக்களிலே முதன்மையானவர். ஆபிரகாம், “கர்த்தருடைய சிநேகிதன்” என்று அழைக்கப்பட்டார். கர்த்தர் தன் இருதயத்தை எல்லாம், ஆபிரகாமோடு பகிர்ந்து கொண்டு, “நான் சேகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனா?” என்றார். ஆபிரகாமுக்குள், கர்த்தர் உலகத்தின் அத்தனை சந்ததியையும் ஆசீர்வதிக்கும்படி சித்தமானார்.

ஆபிரகாமிலிருந்துதான், இஸ்லாம் மார்க்கம், யூத மார்க்கம் தோன்றி யது. கிறிஸ்தவ மார்க்கத்திற்கும், ஆபிரகாமே முற்பிதாவா இருக்கிறார். இயேசுவினுடைய வம்ச வரலாற்றை குறிப்பிடும்போது, “ஆபிரகாமின் குமாரனாகிய, தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்து” என்று குறிப்பிட்டிருக்கிறது (மத். 1:1).

அப்படி கர்த்தர் ஆபிரகாமை அழைத்து, ஆசீர்வதித்து, பேரைப் பெருமைப் படுத்துவதற்குப் பல காரியங்களை விட்டு விலகி, வேறுபாட்டின் ஜீவியத்திற்குள்ளாக ஆபிரகாம் வர வேண்டியதிருந்தது. அப்படியே கர்த்தர் உங்களையும் ஆசீர்வதிக்கும் போது, மாறுபாடான இந்த சந்ததியை விட்டுவிலகி, கர்த்தருக்கென்று பரிசுத்த முள்ளவர்களா, உலகத்தாரினின்று வேறுப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டியது அவசியமாயிருக்கிறது. கர்த்தர் ஆபிரகாமை அழைத்தபோது, முதலாவதாக, அவர் தன் தேசத்தையும், இரண்டாவது, தன் இனத்தையும், மூன்றாவது, தன் தகப்பனுடைய வீட்டையும் விட்டு புறப்பட வேண்டியதாயிற்று. தன் தேசத்தை விட்டே போகும்படி தேவன் சோல்வதின் காரணம், தேசத்தின் பழக்கவழக்கங்கள் தேவனுக்குப் பிரியம் இல்லாததா இருந்ததினாலேயே. ஆகவேதான், அவர் “புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்” என்று கூறுகிறார் (எரே.10:2). ஆபிரகாமின் தகப்பனுடைய பழக்கவழக்கங்கள், கல்தேயரின் பழக்கவழக்கங்களா இருந்தன. அதாவது விக்கிரக ஆராதனை சேகிறவர்களாயிருந்தார்கள். ஆபிரகாம், இன்னும் கர்த்தருடைய கரம் பிடித்து, கானானை நோக்கி நடந்த போது, ஆபிரகாமின் சகோதரரின் மகனாகிய லோத்தை, அவரை விட்டு பிரித்தார். ஆபிரகாம் லோத்திடம் பெருந்தன்மையாக, “நாம் சகோதரர்கள். நமக்குள் வாக்குவாதம் வேண்டாம், நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன்” என்று சோல்லி அன்போடு பிரிந்தார் (ஆதி. 13:8,9).

நாமும்கூட, வாக்குவாதம் பண்ணுகிறவர்களை விட்டு விலக வேண்டியதிருக்கிறது. இன்னும் ஆபிரகாம் கர்த்தருடைய கரம்பிடித்து நடந்தபோது, ஆபிரகாமுக்கு மாம்சத்தின்படி பிறந்த இஸ்மவேலை விட்டும், அடிமைப்பெண்ணாகிய ஆகாரை விட்டும் வேறுபிரிய வேண்டியதாயிற்று (ஆதி.21:12). அப்போது, ஆபிரகாம் கர்த்தரை நோக்கி, “இஸ்மவேல் உமக்கு முன்பாகப் பிழைப்பானாக” என்று, கண்ணீரோடு விண்ணப்பம் பண்ணினபோதிலும், கர்த்தர் எல்லாவற்றையும் நன்மைக்கேதுவாகவே சேவார் என்பதை ஆபிரகாம் அறிந்திருந்தார்.

இன்னும் ஆபிரகாம் கர்த்தருடைய கரம் பற்றி பிடித்தபோது, தன் ஒரே பேறான ஈசாக்கையும் பலிபீடத்திலே அர்ப்பணிக்க வேண்டியதாயிற்று. ஆபிரகாம் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல், தன் சோந்த குமாரனை யார் மூலமா வம்சம் வளரும் என்று கர்த்தர் சோன்னாரோ அவனை பலி சேலுத்த தியாகமா முன் வந்தார். அப்படிப்பட்ட ஆபிரகாமையும், ஈசாக்கையும் கர்த்தர் அபரிமிதமா ஆசீர்வதித்தார்.

நினைவிற்கு:- “கர்த்தர் ஆபிரகாமைச் சகல காரியங்களிலும் ஆசீர்வதித்து வந்தார்” (ஆதி. 24:1)