ஆசீர்வதிப்பேன்!

“நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப் படுத்துவேன்; நீ ஆசீர்வாதமா இருப்பா. பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்” (ஆதி. 12:2,3).

கர்த்தர் இந்த வாக்குத்தத்தத்தைக் கொடுக்கும்போது ஆபிராமுக்கு ஏறக்குறைய 75 வயதாகிவிட்டது. உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன் என்று கர்த்தர் வாக்குப் பண்ணியிருந்தார். ஆனால் ஆபிராமுக்கோ, குழந்தை இல்லை. ஆபிராம் துக்கத்தோடு ஆண்டவரைப் பார்த்து, “ஆண்டவரே அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளை இல்லாமல் இருக்கிறேனே? தேவரீர் எனக்கு புத்திரசந்தானம் அருளவில்லையே!” என்று முறையிட்டார்.

கர்த்தர் அந்த துக்கத்தைக் கவனித்தார். ஆபிரகாமைத் தனியே அழைத்து, “ஆபிரகாமே நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சோல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமா இருக்கும் என்றார். அவன் கர்த்தரை விசுவாசித்தான்; அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்” (ஆதி. 15:5,6). ஆபிராமினுடைய விசுவாசம் கர்த்தருடைய வாக்குத்தத்தத்தை சார்ந்து கொண்டதிலே இருந்தது. “ஆனபடியால், சரீரஞ்சேத்தவனென்று எண்ணத்தகும் ஒருவனாலே, வானத்திலுள்ள பெருக்கமான நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரை யிலுள்ள எண்ணிறந்த மணலைப்போலவும், மிகுந்த ஜனங்கள் பிறந்தார்கள்” (எபி. 11:12).

தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்கு ஒரு வாக்குத்தத்தத்தைக் கொடுப்பார் என்றால், அதை உறுதியா பிடித்துக்கொள்ளுங்கள். நிச்சயமாகவே தன்னுடைய வாக்கை அவர் நிறைவேற்றுவார். அப்பொழுது விசுவாசம் உங்களுக்குள் வருகிறது. விசுவாசம் உங்களுக்குள் வரும்போது அற்புதங்கள் நடக்கிறது. “அவன் (ஆபிரகாம்) விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் சேத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் சேத்துப்போனதையும், எண்ணாதிருந்தான். தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாச் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறரென்று முழு நிச்சயமா நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்” (ரோமர் 4:19-21).

ஒரு முறை ஒரு ராஜாவுக்கு முன்பாக, குற்றவாளியா, ஒருவன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டான். “ஐயா நான் மரணம் அடைவதற்கு முன்பாக, ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து மரிக்கப் பிரியப்படுகிறேன்” என்றான். தண்ணீரைப் பெற்றுக்கொண்டபோதோ, அவன் குடிக்காமல் மரணபயத்தோடு நடுங்கினான். ராஜா அவனுக்கு ஒரு வாக்குத்தத்தத்தைக் கொடுத்து, “நீ இந்த தண்ணீரைக் குடித்த பின்புதான் உன் மரண தண்டனை நிறைவேற்றப்படும்” என்று சோன்னார். அந்த கைதிக்கு மிகுந்த சந்தோஷம் உண்டானது “தண்ணீரைக் குடித்தபிறகுதானே, எனக்கு மரண தண்டனை ஏற்படும். இதோ, நான் தண்ணீரை குடிக்கவில்லை, கீழே ஊற்றுகிறேன். எனக்கு மரண தண்டனை இல்லை” என்று சோன்னான். ராஜா அவனை விடுதலையாக்கினார். தேவபிள்ளைகளே, ஒரு ராஜா தன் வாக்கை அப்படி நிறைவேற்றுவார் என்றால் ராஜாதி ராஜா தான் கொடுத்த வாக்குத்தத்தத்தை எவ்வளவு உறுதியா நிறைவேற்றுவார்! சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நினைவிற்கு:- “விசுவாச மார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளை களென்று அறிவீர்களாக” (கலா. 3:7).