ஆசீர்வதிக்கிறவர்களை!

“உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன்; உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்” (ஆதி. 12:3).

தேவ ஜனத்தை, எப்போதும் நீங்கள் ஆசீர்வதியுங்கள். இஸ்ரவேல் ஜனங்களை சபிக்கும்படி பிலேயாம் வந்தபோது, கர்த்தருடைய கோபம் அவன்மேல் மூண்டது. கர்த்தர் உருவின பட்டயத்தோடு பிலேயாமை எச்சரித்தார். ஆகவே பிலேயாம் தன்னை சபிக்கச் சொன்ன பாலாக் என்ற ராஜாவிடம், “இதோ, ஆசீர்வதிக்கக் கட்டளை பெற்றேன்; அவர் ஆசீர்வதிக்கிறார்; அதை நான் திருப்பக்கூடாது” (எண். 23:20) என்றான். நானும், நீங்களும், மற்றவர்களை ஆசீர்வதிக்கும்படி கட்டளை பெற்றிருக்கிறோம்.

யாக்கோபுக்கு தீங்கு செய்யும்படி, அவனுடைய சோந்த மாமனாராகிய லாபான், தன் சகோதரரை கூட்டிக்கொண்டு, ஏழு நாட்கள் பிரயாணம்பண்ணி, கீலேயாத் மலையிலே அவனை கண்டுபிடித்தார். அந்த இரவு கர்த்தர் லாபானுக்குச் சோப்பனத்தில் தோன்றி, “நீ யாக்கோபோடே நன்மையே அன்றித் தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு” என்றார் (ஆதி. 31:24). ஆம், கர்த்தர் ஒருநாளும் உங்களுக்கு தீங்குச் சேய, யாரையும் அனுமதிப்பதில்லை. காரணமில்லாமல் உங்கள்மேல் இட்ட சாபம் தங்காது. ஆகவே, தீய மனுஷர்கள் தீங்குச் சேதுவிடுவார்களோ, சத்துருக்கள் தந்திரமா பின்னால் குழிதோண்டிவிடுவார்களோ, என்று கலங்காதிருங்கள். குழி தோண்டினவர்கள், தோண்டிய குழியிலே விழுவார்களே தவிர, உங்களுக்கு தீங்குச் சேய முடியாது.

கர்த்தர் உங்களுக்காக வழக்காடி, யுத்தம் சேவார் அல்லவா? பயப்படாதிருங்கள். கர்த்தர் தீமையை நன்மையாக மாற்றுவார். யோசேப்பை, சோந்த சகோதரர்களே பாழும் குழிக்குள் தள்ளினார்கள். பின்பு தூக்கியெடுத்து, எகிப்துக்குச் சேல்லும் மீதியானிய வியாபாரிகளிடம் விற்றார் கள். ஆனால் கர்த்தர், யோசேப்புக்கு துணைநின்று, தீங்கு சேய நினைத்தவர்கள் அத்தனை பேரையும், யோசேப்புக்கு முன்னால் கை கட்டி நிற்கும்படிச் சேதார். முகங்குப்புற விழுந்து வணங்கும்படிச் சேதார். உங்களை விரோதிக்கிற மக்களுக்கும், கர்த்தர் அப்படியே சேவார். ஆகவேதான், யோசேப்பு, தன்னுடைய எல்லா சகோதரர்களையும் தன்னருகிலே வைத்து, உண்ண உணவும், வஸ்திரமும் கொடுத்தது மட்டுமல்ல, அவர்கள் மந்தை மேப்பதற்கு சேழிப்பான கோசேன் நாட்டையும் கொடுத்தார்.

யோசேப்பு அவர்களைப் பார்த்து,”நீங்கள் எனக்குத் தீமைசேய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார். ஆதலால், பயப்படாதிருங்கள் நான் உங்களையும், உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன் என்று அவர்களுக்கு ஆறுதல்சோல்லி, அவர்களோடே பட்சமாப் பேசினான்” (ஆதி. 50:20,21). தேவபிள்ளைகளே, தீங்கு சேய நினைக்கிற மக்கள் மேல் நீங்கள் கோபமும், எரிச்சலும் கொள்ளாதிருங்கள். கிறிஸ்து உங்களை மன்னித்ததுபோல, நீங்களும் அவர்களை மனப்பூர்வமாக மன்னியுங்கள்.

நினைவிற்கு:- “இப்படிச் சேவதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும், அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெயப்பண்ணுகிறார்” (மத். 5:45).