இறுதி!

நெய்கிறவன் எறிகிற நாடாவிலும் தீவிரமாய் ஓடுகிறது; அவைகள் நம்பிக்கையில்லாமல் முடிந்துபோகும்” (யோபு 7:6).

வருஷத்தின் இறுதி நாட்களுக்குள் வந்திருக்கிறோம். கர்த்தர் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் மனப்பூர்வமாக கர்த்தரைத் துதிப்பீர்களாக! மட்டுமல்ல, உங்களைச் சுத்திகரித்துக்கொண்டு, புதிய ஆசீர்வாதத்தின் நன்மையினாலும், வாக்குத் தத்தங்களினாலும், நிரப்பிக்கொள்ள இந்த இறுதி நாட்களை பயன்படுத்துவீர்களாக! புதிய ஆண்டு, உங்களுக்கு மிகுந்த ஆசீர்வாதமாக இருக்கும்படி வாழ்த்துகிறேன். வாழ்க்கையைக் குறித்து, பல தேவனுடைய மனிதர்கள், எழுதி வைத்திருக் கிறார்கள்.

“எங்கள் வாழ்க்கை, காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாயிருக் கிறது. அது காலையிலே முளைத்துப் பூத்து, மாலையிலே அறுப்புண்டு உலர்ந்து போம்” (சங். 90:5,6). பக்தனாகிய யாக்கோபு கேட்கிறார், “உங்கள் ஜீவன் எப்படிப் பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு, தோன்றாமற்போகிற புகையைப் போலிருக்கிறதே” (யாக். 4:14). அநித்தியமான இந்த உலகத்தில், நாம் அந்நியரும், பரதேசியுமாயிருக்கிறோம் என்று உணர்ந்து ஜீவிப்பீர்களாக. மட்டுமல்ல, கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த கிருபையின் நாட்களிலே, கர்த்தர் நியமித்திருக்கிற கிரியைகளை செய்து முடிக்க, ஜாக்கிரதையுள்ளவர்களாக இருப்பீர்களாக! ஒரு பக்தன் பாடினான். “மேலோக வாசிகளாகும் நமக்கிங்கு, வீடென்றும் நாடென்றும் சொல்லலாமோ? என்ற பக்தன் பாடும்போது, வேதத்திலுள்ள விசுவாச வீரர்களின் அறிக்கை என்ன? “பூமியின்மேல் தங்களை அந்நியரும், பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்” (எபி. 11:13). ஆபிரகாமுக்கு அந்த நினைவு எப்பொழுதும் இருந்தது.

நான் உங்களிடத்தில் அந்நியனும், பரதேசியுமாயிருக்கிறேன் என்றார் (ஆதி. 23:4). மோசேயும் அதையே சொன்னார் (யாத். 2:22). தாவீதின் அறிக்கையும் அதுதான் (சங். 119:19). இந்த கூடாரத்தில் நாம் தவித்து, பரம வாசஸ்தலத்தை தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சை யுள்ளவர்களாயிருக்கிறோம் (2 கொரி. 5:2). நம்முடைய காலங்கள், கர்த்தருடைய கரத்திலிருக்கிறது (சங். 31:15). இந்த உலக வாழ்க்கையிலே, முதலாவது கர்த்தருக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

அவரை நேசித்து கனம்பண்ணுங்கள். “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்” (மத். 6:33). “ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு” என்று பிரசங்கி மூன்றாம் அதிகாரத்தில் ஏறக்குறைய பதினெட்டு காலங்களை வரிசைப்படுத்தி எழுதுகிறார். ஆம், ஒவ்வொரு நாளும், நீங்கள் ஜெபிப்பதற்கு குறிப்பிட்ட காலத்தை ஒதுக்குங்கள். ஊக்கமாய் செய்கிற ஜெபம், பிரச்சனைகளை நீக்கி, தேவ சமாதானத்தை, உங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும் கொண்டு வரும். அதுபோல வேதம் வாசிக்க, தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங் கள். அது நித்தியத்தை உங்களுக்கு அறிவிக்கும். உங்களை விசுவாச வீரனாக்கும். ஜெயங்கொண்டவனாய் தேவ சமுகத்தில் நிலைநிறுத்தும். அதுபோல கிறிஸ்துவை சாட்சியாய் மற்றவர்களுக்கு அறிவியுங்கள். ஆத்துமாக்களை ஆதாயம் செய்யுங்கள். அது உங்கள் உள்ளத்தை மகிழ்ச்சியாக்கும்.

நினைவிற்கு:- “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். நீங்கள் மாளும்போது, உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்” (லூக். 16:9).