சேஷ்ட புத்திரர்கள்!

“ரூபனே, நீ என் சேஷ்டபுத்திரன்; நீ என் சத்துவமும், என் முதற்பெலனுமானவன்; நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன்” (ஆதி. 49:3).

ஏசா மட்டுமல்ல, தேசத்தில் அநேக சேஷ்ட புத்திரர்களைப் பார்க்கிறோம். உலகத் தில் முதன்முதலாக சேஷ்ட புத்திரனாக பிறந்தவர், காயீன். ஆதாம், ஏவாளுக்கும் மட்டுமல்ல, முழு மனுக்குலத்தின், முதல் குமாரனாக அவர் பிறந்தார். “கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன்,” என்று ஏவாள் சொன்னாள் (ஆதி. 4:1). ஆனால், அவன் தன் சகோதரனாகிய ஆபேலின் மேல் பொறாமை கொண்டு, அவனை கொலை செய்ததினிமித்தம், சபிக்கப்பட்டவனாக பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருந்தான் (ஆதி. 4:12). அவனுடைய சேஷ்ட புத்திர பாகம், சேத்துக்குப் போனது. அடுத்ததாக, யாக்கோபுக்கு மூத்த மகனாக ரூபன் பிறந்தார்.

யாக்கோபு அவனை குறித்து, “ரூபனே, நீ என் சேஷ்டபுத்திரன். நீ என் சத்துவமும், என் முதற்பெலனுமானவன். நீ மேன்மையில் பிரதானமும், வல்லமையில் விசேஷமுமானவன்” என்று சொன்னாலும் கூட, “தண்ணீரைப்போல தளம்பினவனே, நீ மேன்மை அடையமாட்டாய். உன் தகப்பனுடைய மஞ்சத்தின்மேல் ஏறினாய். நீ அதைத் தீட்டுப்படுத்தினாய்” என்று கடிந்து கொண்டார் (ஆதி. 49:3,4). ரூபனுக்கு வரவேண்டிய சேஷ்ட புத்திர பாகம், யோசேப்பின்மேல் கடந்துச் சென்றது.

கர்த்தர் பார்வோனைப் பார்த்து, “இஸ்ரவேல் என் குமாரன். என் சேஷ்ட புத்திரன் என்று சொன்னார்.” கானானிலிருந்து எகிப்துக்கு தானியம் வாங்கச் சென்ற இஸ்ரவேலர், எகிப்தின் செழுமையான பகுதியிலே வாழ்ந்து, கானான் தரிசனத்தையே இழந்துபோனார்கள். இதினிமித்தம் பார்வோனுக்கும், எகிப்துக்கும், அடிமைகளாகி விட்டார்கள். எகிப்திலுள்ள பார்வோன், பிறக்கும் ஆண் பிள்ளைகளையெல்லாம் நதியில் போட்டுவிட வேண்டுமென்று கட்டளையிட்டான்.

கர்த்தர் சொன்னார், “இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன்; எப்பீராயீம் என் சேஷ்ட புத்திரனாயிருக்கிறான்.” ஆனால் புதிய ஏற்பாட்டுக்கு வரும் போது, அங்கே ஆவிக்குரிய சேஷ்ட புத்திரனாக, இயேசு கிறிஸ்துவைப் பார்க்கிறோம். அவர் பிதாவுக்கு ஒரேபேறான குமாரன். அவர்மேல் விசுவாசம் வைக்கிறவர்கள், அவரோடுகூட சேஷ்ட புத்திர பாகத்தை அனுபவிப்பார்கள்.

அப்போஸ்தலனாகிய யோவான் சபைக்கு எழுதும்போது, “உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்து வினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக” (வெளி. 1:5). சேஷ்ட புத்திரனாக மாறின, அவர்களுக்கு கிடைக்கும் மிகப் பெரிய ஆசீர்வாதம், தேவனுடைய வல்லமையாகும். இயேசு கிறிஸ்து, முதற்பேறான சேஷ்ட புத்திர னாயிருக்கிறபடியால், அவருக்கு அபிஷேகமும், வல்லமையும் கிடைத்தது. “நசரே யனாகிய இயேசுவைத் தேவன், பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார். தேவன், அவருடனேகூட இருந்தபடியினாலே, அவர் நன்மை செய்கிறவராயும், பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்” (அப். 10:38). தேவபிள்ளைகளே, இயேசு கிறிஸ்து தம் இரத்தத்தினால், உங்கள் ஒவ்வொருவரை யும் மீட்டு, தம்முடைய பிள்ளைகளாகும்படி அதிகாரம் கொடுத்தார். ஆகவே வல்லமை யுள்ளவர்களாய், கிறிஸ்துவின் கிரியைகளை செய்யுங்கள். அற்புதங்களினாலும், அடையாளங்களினாலும் வசனத்தை உறுதிப்படுத்தி, எழும்பிப் பிரகாசியுங்கள்.

நினைவிற்கு:- “அவர் வேதபாரகரைப்போலப் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியினால், அவருடைய போதகத்தைக்குறித்து ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள்” (மாற். 1:22).