அன்னாளின் ஜெபம்!

“அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி, சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண் ணோக்கிப் பார்த்து” (1 சாமு. 1:10,11).

ஆண்டவர், ஜெபத்தைக் கேட்கிறவர் மட்டுமல்ல, உங்கள் ஜெபத்திற்கு பதிலளிக்கிறவரும்கூட. நீங்கள் நினைப்பதற்கும், வேண்டிக்கொள்ளுவதற்கும், மிக அதிகமாய் உங்களில் அன்புகூர்ந்து, சிறந்த பலனை காண கிருபைச் செய்கிறவர். அவர் மனதுருக்கமும், பாசமும் மிகுந்தவர்.

”All the Prayers of the Bible” என்ற ஒரு புத்தகத்தை, ஹெல்பர்ட் லாக்கியர் என்பவர் எழுதியிருக்கிறார். அதில் வேதத்திலுள்ள 650 ஜெபங்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. அவற்றில் 450 ஜெபங்களுக்கு மேலாக கர்த்தரிடத்திலிருந்து பதிலைப் பெற்றிருக்கின்றன. அன்னாளின் ஜெபம், முதன் முதலில் வேதத்தில் எழுதப்பட்ட ஒரு பெண்மணியின் ஜெபமாகும். அன்னாள் நீண்டநேரம் ஜெபித் தாலும்கூட, அதன் சாராம்சத்தை சுருக்கி, ஒரே ஒரு வசனத்தில் 1 சாமு. 1:11-ல் எழுதியிருக்கிறார்.

“அன்னாள்” என்ற வார்த்தைக்கு, தேவ தயவு, தேவ கிருபை, தேவ காருணியம் என்பதெல்லாம் அர்த்தமாகும். பழைய ஏற்பாட்டில் ஒரு அன்னாளையும், புதிய ஏற்பாட்டில் ஒரு அன்னாளையும் காணலாம். பழைய ஏற்பாட்டிலுள்ள அன்னாள், எல்க்கானா என்ற மனிதனின் இரண்டாவது மனைவியாகும். பழைய ஏற்பாட்டிலுள்ள எல்க்கானாவின் மனைவியாகிய, இந்த அன்னாளுக்கு பிள்ளைகளில்லை. ஆனால் அவளுடைய சக்களத்தியாகிய பெனின்னாளுக்கு பிள்ளைகள் இருந்தார்கள். அவள் நாள்தோறும், தனது வார்த்தைகளினால் அன்னாளை குத்தி, வேதனைப்படுத்தி, மலடி என்று பரியாசம்பண்ணி, மனமடிவுண்டாக்கினாள்.

அந்த குத்துதல், அன்னாளை கர்த்தருடைய பாதத்திற்கு வந்து, தன் இருதயத்தை ஊற்றிவிடும்படி ஏவினது. உங்கள் வாழ்க்கையில், கர்த்தர் எழுப்பியிருக்கிற பெனின்னாளுக்காக நன்றி செலுத்துங்கள். முள் குத்த, குத்த, லீலிபுஷ்பம் வாசனை பரிமளிக்கும். “முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரத்திகளுக்குள்ளே, எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்” (உன். 2:2).

அண்ணனாகிய ஏசாவுக்கு பயந்த பயம், யாக்கோபுக்கு முள்ளை போல குத்தி யது. ஊக்கமாய் ஜெபிக்கும்படி ஏவினது. “என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போக விடேன்,” என்று கர்த்தரிடம் மன்றாடினார் (ஆதி. 32:26). அப். பவுலை குத்திய முள், “கிருபையின் மேல் கிருபையை” அவருக்குப் பெற்றுத் தந்தது.

வெள்ளைப்போள மரத்தை கூரிய கத்தியினால் கிழிக்கும்போது, வெண்மை நிறமான பிசின், வாசனை திரவியமாக வழிந்து வருகிறது. அது மிருதுவானது, மென்மையானது, சற்று கசப்புள்ளது. ஆனாலும் அது சிறந்த வாசனைத் தைலமாக பயன்படுகிறது. அன்னாள், பலவகை பாடுகள், உபத்திரவங்கள், மலடி என்ற பட்டயக்கருக்குக் குத்துக்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு, தேவ சமுகத் துக்குப் போய் மிகவும் அழுது விண்ணப்பம் பண்ணினாள் (1 சாமு. 1:10).
தேவபிள்ளைகளே, உலகப்பிரகாரமாக அழுவதோடு நின்றுவிடாமல், கண்ணீ ரோடு கர்த்தரிடத்தில் கேளுங்கள். “கேளுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்” (மத். 7:7) என்று, இயேசு கிறிஸ்து வாக்குப்பண்ணியிருக்கிறார் அல்லவா? உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்படி, கர்த்தரிடத்தில் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்.

நினைவிற்கு:- “நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள் வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார்” (யோவா. 16:23).