சித்திரத் தையலாடை!

“ராஜகுமாரத்தி, உள்ளாகப் பூரணமகிமையுள்ளவள், அவள் உடை பொற்சரிகை யாயிருக்கிறது. சித்திரத்தையலாடை தரித்தவளாய், ராஜாவினிடத்தில் அழைத்துக் கொண்டுவரப்படுவாள்” (சங். 45:13,14).

வேதத்தில் ஆவிக்குரிய அநேக வஸ்திரங்களை நாம் காணலாம். இரட்சிக்கப் படும்போது கர்த்தர் இரட்சிப்பின் வஸ்திரத்தை உடுத்துவிக்கிறார் (ஏசா. 61:10). ஞானஸ்நானம் பெறும்போது, நீதியின் சால்வையை தருகிறார். பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறும்போது, வல்லமையின் வஸ்திரத்தை தரித்துக்கொள்ளுகி றோம். கர்த்தர் உங்களுக்கு ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப்பதிலாக துதியின் உடையையும் கொடுக்கிறார் (ஏசா. 61:3). தம்முடைய மணவாட்டிக் கென்று சுத்தமும், பிரகாசமுமான மெல்லிய வஸ்திரத்தை தரிப்பிக்கிறார் (வெளி. 19:8). ஆனால் கர்த்தர் கொடுக்கிற மிகச் சிறந்த அலங்காரமான வஸ்திரம், பொற் சரிகையும், சித்திரத்தையலாடையுமேயாகும்.

தேவபிள்ளைகளே, உங்கள்மேலுள்ள அழைப்பு விசேஷமானது. கர்த்தர் உங்களை தனக்கென்று மணவாட்டியாக, கற்புள்ள கன்னிகையாக தெரிந்தெடுத்திருக்கிறார். கிறிஸ்துவின் வருகையின்போது, நீங்கள் வளர்ந்து பூரணராகி, மகிமையின்மேல் மகிமையடைவீர்கள். நம்முடைய அற்பமான சரீரத்தை கர்த்தர் தம்முடைய மகிமையான சரீரத்துக்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார் (பிலி. 3:21). பொற்சரிகை என்றால் அது எதைக் குறிக்கிறது? அது பரிசுத்தத்தையும், விசுவாசத்தையும் குறிக்கிறது. எவ்வளவு சோதனைகளும், பாடுகளும் வந்தாலும், உங்கள் பரிசுத்தத் தையும், விசுவாசத்தையும் காத்துக்கொள்வீர்களானால், ஜெயத்தின் மேல் ஜெய மடைவீர்கள். அதுவே பொற்சரிகையாய் மாறும்.

அடுத்த அலங்கார வஸ்திரம் சித்திரத்தையலாடையாகும் (சங். 45:14). சித்திரத்தை யலாடையை நெய்வதும், பின்னுவதும் எளிதான காரியமல்ல. அந்த ஆடையின்மேல் ஊசியும், நூலும் குத்தி குத்தி, பல நிற நூலினால் அழகாக, அலங்காரமாக மாறிவிடும். எல்லா ஆடைகளிலும் அது மிகவும் விலையேறப்பெற்றது. அது போல கிறிஸ்துவின் பரிபூரணத்தைப் பெற்றுக்கொள்ள பாடுகளானாலும், உபத்திரவங்களா னாலும் உள்ளம் குத்தப்பட்டு, முடிவில் ஓட்டத்தை வெற்றியோடு ஓடி முடிக்கும் போது, சித்திரத்தையலாடையைப் பெற்றுக்கொள்வீர்கள்.

பாருங்கள்! அன்னாள் தன் சக்களத்தியின் கொடிய வார்த்தைகளினால் குத்தப் பட்டாள். இதனால் மனம் நொந்து வேதனைப்பட்ட, அன்னாள் தேவ சமுகத்துக்கு வந்து, தன் உள்ளத்தை ஊற்றி ஜெபித்தாள். அது அவளில் தெய்வீக குணாதிசயத்தையும், சுபாவத்தையும் உருவாக்கிற்று. இப்படிதான் லீலி புஷ்பமும் கூட. இரவு நேரத் திலே முட்களின் மத்தியிலே மலர்ந்தாலும், எவ்வளவுதான் குத்தப்பட்டு, கிழிக்கப் பட்டாலும், அது பரிசுத்தமுள்ள வெண்மை நிறமாய் எல்லா திசைகளிலும் தனது நறுமணத்தைப் பரப்புகிறது. ஆண்டவர் சொன்னார், முள்ளுகளுக்குள்ளே லீலி புஷ்பம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரிய மானவளும் இருக்கிறாள்” (உன். 2:2). அதுபோல பாடுகளின் மத்தியில் ஜெப வாசனை வீசுகிறவர்கள்மேல், கர்த்தர் மகிழ்ந்து களிகூருகிறார்.

பாடுகளும், உபத்திரவங்களும், வேதனைகளும் உங்களுக்கு வரும்போது, கல் வாரிச் சிலுவையிலே உங்களுக்காக பாடுகளை சகித்த கிறிஸ்துவை நினைத்துக் கொள்ளுங்கள். அப்போது அவர் தம்முடைய வாயைத் திறக்கவில்லை. சாந்தத்தோடும், பொறுமையோடும் சத்தமிடாத ஆட்டைப்போல இருந்தார் (ஏசா. 53:7).

நினைவிற்கு:- “சித்திரத்தையலாடையை உனக்கு உடுத்தி, சாயந்தீர்ந்த பாதரட்சை களை உனக்கு தரித்தார்” (எசேக். 16:10).