வல்லமையைத் தரித்துக் கொள்ளுங்கள் !

“எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்” (ஏசா. 52:1).

ஏன் கர்த்தர், “எழும்பு, எழும்பு, சீயோனே” என்று துரிதமாக நம்மை எழுப்பு கிறார்? முதலாவது, அவருடைய அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள்ள வேண்டும். இரண்டாவது, கர்த்தர் தருகிற வல்லமையைத் தரித்துக்கொள்ள வேண்டும்.

அப்போதுதான் வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ முடியும். இந்த வல்லமையை தரித்துக்கொள்ள, முதலாவது, பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இரண்டாவது, வாக்குத்தத்த வசனங்களை உரிமை பாராட்டி சுதந்தரித்துக் கொள்ள வேண்டும்.

மூன்றாவதாக, நீங்கள் தேவ வல்லமையைப் பெற்றுக்கொள்ள, இயேசுவின் நாமத்தை அபிஷேகத்தோடு பயன்படுத்துங்கள். கர்த்தருடைய நாமத்திலே வல்லமை இணைந்திருக்கிறது (மாற். 16:17). நான்காவதாக, இயேசுவின் இரத்தத்தில் மகாப் பெரிய வல்லமையுண்டு. இயேசு கிறிஸ்துவின் இரத்தம், சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கிறது (1 யோவா. 1:7). மட்டுமல்ல, அந்த இரத்தம் வலு சர்ப்பத்தின் தலையை நசுக்குகிறது. ஆட்டுக்குட்டியின் இரத்தத்தாலும், சாட்சியின் வசனத்தினாலும், சாத்தானை ஜெயித்தார்கள் (வெளி. 12:11).

இயேசு கிறிஸ்து எப்பொழுதும், “வல்லமையின் வஸ்திரத்தைத் தரித்திருந்தார்.” வேதம் சொல்லுகிறது, “நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார். தேவன் அவருடனேகூட இருந்தபடியி னாலே, அவர் நன்மைசெய்கிறவராயும், பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்” (அப். 10:38).

இயேசுவை பின்பற்றிய அப்போஸ்தலர்களும், வல்லமையினால் நிரம்பியிருந் தார்கள். பேதுருவை நிரப்பிய அந்த வல்லமை, அவருடைய நிழலையும் நிரப்பி யிருந்தது. “பிணியாளிகளைப் படுக்கைகளின் மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, பேதுரு நடந்துபோகையில், அவருடைய நிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு, அவர்களை வெளியே வீதிகளில் கொண்டு வந்து வைத்தார்கள். அவர்களெல்லாரும் குணமாக்கப்பட்டார்கள்” (அப். 5:15,16).

அப். பவுலும்கூட, தேவனுடைய வல்லமையால் நிரம்பியிருந்தார். அந்த வல்லமை அவருடைய வஸ்திரங்கள்மேலும் இறங்கியிருந்தது. வேதம் சொல்லு கிறது, “பவுலின் கைகளினாலே, தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார். அவருடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும், கச்சைகளையும் கொண்டு வந்து, வியாதிக்காரர்மேல் போட, வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப் போயின. பொல் லாத ஆவிகளும் அவர்களை விட்டுப் புறப்பட்டன” (அப். 19: 11,12).

இரட்சிப்பில் பிறக்கும் வல்லமையைப் பார்க்கிலும், அதிகமான வல்லமை பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தில் இருக்கிறது. ஆகவேதான் வேதம், “எழும்பு, எழும்பு சீயோனே, உன்னுடைய வல்லமையைத் தரித்துக்கொள்” என்கிறது. தேவ பிள்ளைகளே, நீங்கள் விசுவாசிகளானால் மட்டும் போதாது. சுத்திகரிக்கப்பட்ட உள்ளத்தோடும், தாகத்தோடும், வாஞ்சையோடும் பரிசுத்த ஆவியின் அபிஷே கத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். அப். பவுல் எபேசுவுக்கு வந்தபோது, அங்குள்ள விசுவாசிகளைப் பார்த்து “நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா? என்று கேட்டார் (அப். 19:2). தேவபிள்ளைகளே, இது பரிசுத்த ஆவியானவரின் காலம். கேட்கிற எவனும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுகி றான். நிச்சயமாகவே, நீங்கள் எழும்பிப் பிரகாசிப்பீர்கள்.

நினைவிற்கு:- “தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறு களையும் ஊற்றுவேன். உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின் மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்” (ஏசா. 44:3).