எழும்பி உடுத்திக் கொள்!

“எழும்பு, எழும்பு .. பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள்” (ஏசா. 52:1).

ஏன் எழும்ப வேண்டும்? வேதம் சொல்லுகிறது, உன் அலங்காரமான, சிறப்பான வஸ்திரங்களை உடுத்தும்படி எழும்பு. சாதாரண வஸ்திரமுமுண்டு, அலங்கார வஸ்திரமுமுண்டு. வீட்டிலே சாதாரணமான உடை உடுத்துகிறோம். ஆனால் திரு மணமாகும்போது, விசேஷமான ஆடைகளை அணிகிறோம். செல்வந்தர்கள், வசதி படைத்தவர்கள், அலங்காரத்துக்காக அநேக வஸ்திரங்களை வைத்திருப்பார்கள்.
இஸ்ரவேல் தேசத்திலே ராஜ குடும்பங்களில் நடைபெறும் திருமணத்திற்கு வருப வர்கள், தங்களை சுத்திகரித்து, அலங்காரமான வஸ்திரங்களைத் தரித்துக்கொள்ளுவார்கள். அப்படி தரிக்க முடியாத ஏழைகளாயிருந்தால், அவர்களுக்கு ராஜா இலவசமாய் ராஜரீக உடைகளை உடுத்துவார். இல்லாவிட்டால் ராஜா அவர்களைப் பார்த்து, “சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய், இங்கே எப்படி வந்தாய்?” என்று கேட்பார் (மத். 22:12).

அலங்கார வஸ்திரங்களிலே, முதலாவது காணப்படுவது இரட்சிப்பின் வஸ்திரம். “மணவாளன் ஆபரணங்களால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மண வாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்” (ஏசா. 61:10).

கர்த்தர் உங்களுக்கு இலவசமாய்த் தருகிற இரட்சிப்பின் வஸ்திரங்களை நீங்கள் உடுத்தியிருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார். அதற்கு உங்களுக்கு பாவ மன்னிப்பு மிகவும் அவசியம் (லூக். 1:77). பாவ மன்னிப்பைப் பெற என்ன செய்ய வேண்டும்? உங்களுடைய பாவங்களை மன்னிக்க, கர்த்தர் உண்மையும், நீதியுமுள்ளவராயிருக்கிறார் (யோவா. 1:9). ஞானி சொல்லுகிறார், “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான். அவைகளை அறிக்கைசெய்து விட்டு விடுகிறவனோ, இரக்கம் பெறுவான்” (நீதி. 28:13).

இரட்சிப்பை ஆண்டவர் இலவசமாய் உங்களுக்குக் கொடுத்ததினால், அது சாதாரணமானது அல்ல. கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால், அது சம்பாதிக்கப்பட்டது. அதை உங்களுக்குக் கொடுப்பதற்காக, விண்ணிலிருந்த தேவ குமாரன், மண்ணுலகத்துக்கு வந்து, பாடுபட்டு, சிலுவை சுமந்து, இரத்தம் சிந்தி, இரட்சிப்பை உங்களுக்குப் பெற்றுத் தந்திருக்கிறார். “அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத ஆட்டுக்குட்டி யாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே, மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே” (1 பேது. 1:18,19).

அடுத்த அலங்கார வஸ்திரம், “நீதியின் சால்வை,” என்னப்படும் (ஏசா. 61:10). நீங்கள் தேவனுடைய நீதியை நிறைவேற்றும்போது, கர்த்தர் கிருபையாக உங்களுக்கு நீதியின் சால்வையைத் தருகிறார். இயேசு கிறிஸ்து, யோவான் ஸ்நானனிடம் ஞானஸ்நானம் பெற வந்தபோது சொன்னார், இப்படி எல்லா நீதியையும் நிறை வேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது (மத். 3:15).

அப்போது, நம்முடைய சுயநீதியான அழுக்கான கந்தை யாவும் மாறிப்போகிறது. கிறிஸ்து வையே நீதியின் சால்வையாக நாம் தரித்துக்கொள்கிறோம். ஞானஸ்நானம் எடுப்பதினால், யாரும் எந்தவிதத்திலும் குறைந்துபோவதில்லை. இந்த அலங்கார வஸ்திரத்தை தரிக்காமல் போவதினால், மாற். 16:16-ன்படி நீங்கள் நியாயந்தீர்க்கப் படுவீர்கள். பரலோகத்தில் உங்களுக்கு இடம் வேண்டுமல்லவா? ஞானஸ்நானம் பெறுங்கள்!

நினைவிற்கு:- “உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனை பேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே” (கலா. 3:27).