விதைப்பும், உயிர்த்தெழுதலும்!

“பரிசுத்தவான்களின் மரணம், அவர் பார்வைக்கு அருமையானது” (சங். 116:15).

விதையானது, சுவிசேஷத்திற்கு ஒப்புமையானது. கண்ணீரின் ஜெபத்துக்கு, ஒப்புமையானது. கர்த்தருக்குக் கொடுப்பதற்கு ஒப்புமையானது. மாத்திரமல்ல, ஒரு மனிதனுடைய மரணத்தைக்கூட, வேதம் விதைத்தலுக்கு ஒப்புமையாகக் கூறுகிறது. விதைப்பு இருக்குமென்றால், நிச்சயமாகவே அறுப்பும் இருக்கும் (ஆதி. 8:22).

பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனுடைய சரீரமும், விதைக்கப்படுகிறது. மிருகங்களுக்கு ஆத்துமா இல்லை. ஆகவே அவைகளுடைய சரீரம் விதைக்கப் படுவதில்லை. அவைகள் புதைக்கப்பட்டு, மண்ணோடு மண்ணாக மடிந்து போகி றது. பூமிக்கு உரமாகிறது. சாலொமோன் ஞானி சொன்னார், “உயர ஏறும் மனுஷ னுடைய ஆவியையும், தாழப் பூமியிலிறங்கும் மிருகங்களுடைய ஆவியையும் அறிகிறவன் யார்?” (பிர. 3:21).
ஒரு தேவனுடைய பிள்ளையின் மரணம், அல்லது ஒரு பரிசுத்தவானின் மரணம், கர்த்தருடைய பார்வையில் அருமையாயிருக்கும். இரத்த சாட்சிகளின் மரணத்தின்போது, அவர்களுடைய சரீரம் விதையைப் போல, பூமியில் ஊன்றப் படுகிறது. அவை அநேக ஆத்துமாக்களை எழுப்பக்கூடியது. திருச்சபையின் அஸ்திபாரமே, இரத்த சாட்சிகளின் விதைதான்.

கர்நாடகா மாநிலத்தில், எனக்கு நண்பரான ஒரு நல்ல ஊழியர் இருந்தார். நல்ல ஊக்கமான ஜெபவீரன். திடீரென்று அவருடைய இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு, சென்னைக்கு வந்திருந்தபோது, அவரோடுகூட அதிகமான நேரம் நான் செலவழித்தேன். அவருடைய மரணம், எனக்கு மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது. “ஆண்டவரே, இந்தியாவின் தேவை மிக அதிகமாயிருக்கும்போது, இப்படி இவரை இளம் வயதில் எடுத்து விட்டீரே” என்று கதறினேன்.
அவருடைய அடக்க ஆராதனை நடத்த வந்த போதகர், அவருடைய சரீரத்தை ஒரு விதைக்கு ஒப்பிட்டுப் பேசினார். “அழிவுள்ளதாய் விதைக்கப்படும். அழிவில் லாததாய் எழுந்திருக்கும்” என்று மிகுந்த உறுதியோடும், நம்பிக்கையோடும் பேசின வார்த்தை, என் உள்ளத்தை மிகவும் ஆழமாய் தொட்டது. ஆம், ஒரு விவசாயி, விதைக்கப்போகும்போது, அவன் விதைக்கிற விதைகள், நிச்சயமாய் முளைத் தெழும்பி, நல்ல பலனைக் கொடுக்கும், என்ற நம்பிக்கையோடு விதைக்கிறான்.

ஒரு ஊழியன் மரித்து எத்தனையோ ஆண்டு காலமானாலும் சரி, அவனுடைய எலும்புகளுக்குள்ளே, பரிசுத்த ஆவியானவருடைய வல்லமை தங்கியிருக்க முடியும் என்று, எலிசாவின் எலும்புகள் நமக்கு ஞாபகப்படுத்துகின்றன. எலிசாவை புதைத்த இடத்திலே ஒரு மனிதனை புதைக்கக்கொண்டு சென்றபோது, எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டு, மரித்த அந்த மனுஷன் உயிரோடு எழுந்துவிட்டான் (2 இராஜா. 13:21). வேதம் சொல்லுகிறது, “ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படை வதும் மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது” (எபி. 9:27).

சரீரம், விதையாக விதைக்கப்படுவதை சாத்தான் விரும்புவதில்லை. அந்த கடைசி மணி நேரத்தில் எவ்வளவு அவிசுவாசத்தைக் கொண்டுவர முடியுமோ, அதைரியத்தைக் கொண்டுவர முடியுமோ, அவ்வளவற்றையும் கொண்டு வருவான். காரணம், அவன் சோதனைக்காரன். ஆனால் நீங்களோ, கர்த்தர் பேரிலுள்ள அசைக்கப்பட முடியாத விசுவாசத்தோடு, மரணத்தைக் கடந்து செல்லுவீர்கள்.

நினைவிற்கு:- “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும், பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர். உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்” (சங். 23:4).