உயிர்த்தெழும்பும் விதை!

“யாக்கோபிலிருந்து ஒரு வித்தையும், … எழும்பப்பண்ணுவேன்” (ஏசா 65:9).

நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, எகிப்தியர்களுக்கு உயிர்த்தெழுதலின் நம்பிக்கை இருந்தது. மரித்தவர்கள், ஒரு நாள் மறு வாழ்வுப் பெறுவார்கள் என்ற அந்த நம்பிக்கையினால், எகிப்திய ராஜாக்களுக்கு பெரிய அரண்மனை கட்டுவதைப் பார்க்கிலும். அவர்களுடைய கல்லறையாக பெரிய பிரமிடுகளை எழுப்பினார்கள். அதற்குள்ளே, மரித்த மன்னருடைய சரீரத்தை வைத்துப் பாதுகாப்பார்கள்.

உலகத்தின் கடைசி நாட்களில், அவர்கள் உயிரோடு எழும்பும்போது, அவர் களுடைய பசியைத் தீர்த்துக்கொள்வதற்காக, குடம் குடமாக தேன், உணவு பொருட் கள், மற்றும் தானியங்களை காற்று புகாதபடி, கொஞ்சமும் கெட்டு விடாதபடி, பூச்சி அரித்துவிடாதபடி, தாழி வைத்து பாதுகாத்தார்கள். ஏறக்குறைய மூவாயிரம், நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, அங்கே வைக்கப்பட்டிருந்த தானியங்களை தற்பொழுது கண்டெடுத்தார்கள். ஆனால் என்ன ஆச்சரியம்! அவைகளை விதைத்த போது, அவை மிக அழகான முறையிலே முளைத்தெழும்பி வளர்ந்தது. நல்ல பலனைத் தந்தது. காரணம், நாலாயிரம் ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டபோதிலும், அந்த விதைக்குள் ஜீவனிருந்தது. அந்த விதைகள் இயற்கையாகவே கர்த்தர் கொடுத்த கடினமான தோலோடு பாதுகாக்கப்பட்டிருந்தன. தங்களுக்குள் ஜீவன் இருப்பதை நிரூபித்தது. ஒரு விதை முளைத்தெழும்ப, தண்ணீர் தேவை. சூரிய வெளிச்சம் தேவை. நல்ல நிலம் தேவை.

வருகையிலே கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள், உயிரோடு எழும்புவதற்கு, முதலாவது அவர்களுக்குள் கிறிஸ்துவாகிய ஜீவன் காணப்பட வேண்டும். ஆகவே அப். பவுல், “கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்” (பிலி. 1:21) என்று சொன்னார். இரண்டாவது, கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் எழும்புவதற்கு, பரிசுத்த ஆவியானவருடைய வல்லமை தேவை. கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர், அதே தேவனுடைய ஆவியானவர்தான்; ஒரு விதைபோல இருக்கிற ஒரு சரீரத்துக்குள்ளே இறங்கி, அவர்களை உயிர்ப்பிப்பார் (ரோமர் 8:11).

ஆகவே கிறிஸ்தவர்கள் மரிக்கும்போது, இந்துக்களைப்போல நாம் எரித்து விடா மல், இஸ்லாமியரைப்போல புதைத்துவிடாமல், அவர்களை பூமியிலே நித்திய ஜீவனுக்கென்று விதைக்கிறோம். அந்த கல்லறைக்குள்ளே எலும்புகள் இருக்கிறது என்று நாம் எண்ணினாலும், அந்த எலும்புகளுக்குள்ளே, கிறிஸ்துவின் ஜீவனும், பரிசுத்த ஆவியின் வல்லமையும், இணைந்திருக்கிறது. எக்காள சத்தம் தொனிக்கும் போது, கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள், மகிமையான சரீரத்தோடு எழுந்திருப்பார் கள்.

“மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக் கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும். கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும். பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ள தாய் எழுந்திருக்கும். ஜென்மசரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக் கும்” (1 கொரி. 15:42-44).

தேவபிள்ளைகளே, எந்த மார்க்கத்திலும் இல்லாதபடி, கிறிஸ்தவ மார்க்கத்திலே உயிர்த்தெழுதலின் நம்பிக்கை உண்டு. இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து முதற் பலனாய் உயிரோடு எழுந்ததுபோல, நீங்களும் எழுந்திருப்பீர்கள். அப்போது இந்த மண்ணான சரீரம், மகிமையின் சாயலை அடையும். உயிர்த்தெழுந்த கிறிஸ்துவுக்கு எதிர்கொண்டு போய், என்றைக்கும் அவரோடுகூட இருப்போம். இந்த நம்பிக்கைக் காக, ஆண்டவரை ஸ்தோத்திரியுங்கள்.

நினைவிற்கு:- “முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்” (வெளி. 20:6).