அன்பின் இனிய வெளிப்பாடு!

“தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?” (1 யோவான் 4:20).

புவிஈர்ப்பு விசையின் வல்லமையானது, ஒவ்வொரு பொருளையும் பூமியை நோக்கி இழுக்கிறது. புது திராட்சரசத்தின் வல்லமையானது, புது துருத்தி முதலா பீறப்பண்ணுகிறது. அதுபோல, கிறிஸ்துவின் அன்பின் வல்லமையோ, நெருக்கி ஏவும் வல்லமை. அன்புக்கு ஈடான, வல்லமையான காந்தம், இவ்வுலகில் இல்லை. கிறிஸ்துவின் அன்பு, என்னை நெருக்கி ஏவுகிறது, என்றார் பவுல் (2 கொரி.5:14).
உலகத்திலுள்ள அன்புகளை முக்கியமாக நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

1. “ஸ்டார்க்கே,” இந்த கிரேக்க வார்த்தைக்கு, உறவினர்களுக்குள்ளே, சோந்தக் காரர்களுக்குள்ளே, ஒருவருக்கொருவர் சேலுத்தும் பாசம் என்று பெயர். திருமண வைபவங்களிலே இனஜனபந்துக்கள் ஒன்றாக கூடுகிறார்கள். ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொள்கிறார்கள்.

2. ‘
‘ஃபீலியா, ’ ’ என்றால், நண்பர்களுக்கு இடையே உள்ள சிநேகம். ஒரு நண்பன், இன்னொரு நண்பனிடம் மனந்திறந்து பேசுவான். நண்பனுக்காக, எந்த தியாகமும் சேய ஆயத்தமா இருப்பான்.

3.
“ஈராஸ், “இது மாம்சீகமான அன்பு. காதல் உணர்ச்சியில் தூண்டப்படும் அன்பு. கணவன் மனைவிக்கு இடையே, இல்லற வாழ்க்கையில் ஈடுபட ஊக்குவிக்கும் அன்பு. இந்த அன்பு, அறிமுகமாகாதவர்களை அறிமுகப்படுத்துகிறது. குடும்பங் களைக் கட்டி எழுப்புகிறது.

4. ‘
‘அகாபே,” இது தியாகமான தெவீகமான அன்பு. வேறொன்றையும் எதிர் பார்க்காத ஒரு அன்பு. சத்துருக்களையும் நேசித்து, அன்புகூருகிற அன்பு. நாம் பாவி களாக இருக்கும்போது, கிறிஸ்து நம்மைத் தேடி வந்தாரே! நமக்காக ஜீவனைக் கொடுத்தாரே! அதுதான் அகாபே அன்பு. “நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதா யிருக்கிறது; அதின் தழல் அக்கினித் தழலும், அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது” (உன்.8:6).

கிறிஸ்துவினுடைய அன்பை எண்ணிப் பார்த்த, அப். யோவான் அதை வர்ணிக்க இயலாமல் “இவ்வளவா உலகத்தில் அன்புகூர்ந்தார்” என்று எழுதினார் (யோவான் 3:16). இவ்வளவா? அந்த அன்புக்கு அளவேயில்லை. சிலுவையிலே தன்னுடைய கரங்களை நீட்டிக் கொடுத்து, “மகனே, இவ்வளவா உன்னில் அன்புகூருகிறேன்” என்று சோல்லுகிறார்.

கர்த்தர் என்னென்ன விதங்களில் உங்களை அன்புகூர்ந்தார்? அவருடைய அன்பின் இனிய வெளிப்பாடுகள் என்ன என்று தியானிக்கும்போது, உங்களின் ஊழியத்தில் அக்கினி மூளும். பூமியிலுள்ள மேன்மையெல்லாம் நாம் கிறிஸ்துவில் அன்புகூருவதிலும், அவர் நம்மில் அன்புகூருவதிலுமேயிருக்கிறது. தாவீது கர்த்தரை நோக்கிப் பார்த்து, “என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்” (சங். 18:1) என்கிறார்.

உலகத்திலே, ஆயிரக்கணக்கான மொழிகள் உண்டு. கோடிக்கணக்கான வார்த் தைகள் உண்டு. எல்லா வார்த்தைகளிலும் சிறந்த வார்த்தை, “தேவ அன்பு” என்கிற வார்த்தையே. மற்றவர்களுடைய அன்பை நாம் ருசிக்கிறோம். நாமும் அவர்களில் அன்புகூருகிறோம். உலகமே அன்பில்தான் இயங்குகிறது. அதிலும் தெய்வீக அன்பு இணையற்றது. அது உங்கள் உள்ளத்தை நிரப்பட்டும்.

நினைவிற்கு:- “கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்பு கூருங்கள். உண்மையானவனைக் கர்த்தர் தற்காத்து இடும்பு செய்கிறவனுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார்” (சங். 31:23).