பரிபூரணப்படுத்துவார்!

“திருடன், திருடவும், கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி, வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்” (யோவான் 10:10).

“தேவன் நல்ல தேவன்; சாத்தான் கெட்ட சாத்தான்” என்கிறார், ஓரல் ராபர்ட்ஸ். அநேகர் சாத்தானைக் குறித்து தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் “கர்த்தர் நல்லவர், வல்லவர், போதுமானவர்” என்பதை தெரிந்து வைக்கவில்லை.

கர்த்தர், சாத்தானைத் “திருடன்” என்று குறிப்பிட்டு, அவன், 1. திருடவும். 2.கொல்லவும். 3. அழிக்கவும் வருகிறான் என்று சோல்லுகிறார். அதே நேரத்தில் தம்மைக் குறித்து, “நான் மனுஷருக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப் படவும் வந்தேன்” என்று சோல்லுகிறார்.
மேலை நாட்டில், டெலிவிஷன் காட்சியில் நடிப்பதில், புகழ்பெற்ற ஒரு நடிகர் இருந்தார். ஆனால் அவரோ, பாவ வாழ்க்கையில், முழுவதுமாக ஈடுபட்டு, மன அமைதியை இழந்து வாழ்ந்து வந்தார். ஒருநாள் அவர் அவசரமா வெளியே புறப்பட்டபோது, எதிர்பாராத நெஞ்சுவலி தாக்கினது. அப்படியே உட்கார்ந்தார். அப்பொழுது அவருக்கு, ஒரு தெவீக தரிசனம் தோன்றினது.

அந்த தரிசனத்திலே, அவர் பிதாவாகிய தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக நிற்கிறதைக் கண்டார். ஒரு பக்கம் சாத்தான் நின்றுகொண்டு, அந்த நடிகனைச் சுட்டிக்காட்டி, “இந்த நடிகனை என்னுடன் அனுப்பிவிடும்; பாவ சேற்றிலே சிக்கி அழிந்துக் கொண்டிருக்கும், அவனுடைய உயிரை உறிஞ்சி, நரகத்தை நோக்கி நான் இழுத்துச் சேல்லட்டும்” என்றான்.

மறுபக்கத்தில், இயேசுகிறிஸ்து நின்றுகொண்டு மிகுந்த அன்புள்ளவரா அவனுக்காக பரிந்து பேசி, “நானே அவனை சிருஷ்டித்தேன். நானே அவனுக்காக சிலுவையிலே இரத்தம் சிந்தினேன். அவனுக்கு இன்னும் கிருபையின் தருணம் கொடுக்கப்படட்டும்” என்று சோல்லி, பரிந்து பேசினார். அந்த நடிகன், சாத்தானை யும், இயேசுகிறிஸ்துவையும் மாறி மாறிப் பார்த்தான். அப்பொழுது, சிலுவை காட்சி அவனுடைய உள்ளத்தில் ஜொலித்தது. தனக்காக ஜீவனைக் கொடுத்த இயேசுவுக்காக, அவன் தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தான்.

“என் ஜனங்களுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்” என்று கர்த்தர் சோல்லுகிறார். “குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன், ஜீவன் இல்லாதவன்” (1 யோவா. 5:11,12). சாத்தானுடைய நோக்கமே, அவனுக்காக உருவாக்கப்பட்ட நரகத்தில், அநேகம் பேரைக் கொண்டு சேல்ல வேண்டுமென்பதுதான். ஆகவே, பாவ இச்சைகளை மனுஷனுக்கு காட்டி, பாவம் சேயத் தூண்டி, மனுஷனுடைய ஆத்துமாவில் மரணத்தை கொண்டு வருகிறான். “பாவம் சேகிற ஆத்துமா சாகவே சாகும்” (எசேக். 18:20). “பாவத்தின் சம்பளம் மரணம்” (ரோமர் 6:23).

அதே நேரத்தில், இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள். “அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை” (யோவான் 1:4,5). உங்களுக்கு ஜீவன் தர வந்த இயேசுகிறிஸ்துவைப் பாருங்கள். அவரை உறுதியாக பற்றிக்கொள்ளுங்கள். சாத்தானின் தந்திரங்களிலே நீங்கள் மயங்கி, கல்வாரி நேசத்தையும், நித்திய ஜீவனையும் இழந்துப் போவிடாதேயுங்கள்.

நினைவிற்கு:- “பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறது போல, குமாரனும் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள் சேதிருக்கிறார்” (யோவான் 5:26).