சகலவித நன்மைகளையும்!

“நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும், நமக்குச் சம்பூரணமாக் கொடுக்கிற, ஜீவனுள்ள தேவன் மேல், நம்பிக்கை வைக்கவும்…” (1 தீமோ. 6:17).

சிலர் ஆண்டவரைப் பார்க்கும்போது, பாடுகளுக்குட்படுத்துகிற தேவனாகவே காண்கிறார்கள். உபத்திரவங்களும், கஷ்டங்களும், நஷ்டங்களையுமே அவர் தந்து, தங்களைப் புடமிடுகிறார் என்று எண்ணுகிறார்கள். எப்பொழுது பார்த்தாலும், “நான் யோபுவைப் போல சோதிக்கப்படுகிறேன்” என்றே சோல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆகையினால், அவர்களால், கர்த்தர் தருகிற சம்பூரணமான ஆசீர்வாதங்களை, முழுமையா பெற்றுக்கொள்ள முடியவில்லை!

உலகத்தில், உங்களுக்கு பாடுகள் உண்டு, உபத்திரவங்கள் உண்டு உண்மைதான்! ஆனால் அதே நேரத்தில், ஆண்டவர் பல நன்மையானக் காரியங்களையும் வாக்குப் பண்ணியிருக்கிறார். உலகத்தில் உள்ளவர்களைப் பார்க்கிலும், தம்முடைய பிள்ளைகளை மேன்மைப்படுத்தி, பசுமையான, ஆசீர்வாதங்களைத் தரவும் அவர் காத்திருக்கிறார். கர்த்தர், உங்களை ஆசீர்வதிக்கும்போது, சந்தோஷமா நீங்கள் அதை ஏற்றுக்கொண்டு, உலக வாழ்க்கையிலும், ஆவிக்குரிய வாழ்க்கையிலும் சிறந்தோங்கி சேழிக்கவேண்டும். உன்னதத்திற்குரிய சகல ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும். அப். பவுல், “நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்” என்று சொன்னார் (பிலி. 4:11,12).

கர்த்தர் எவ்வளவா, உங்களை நேசித்து, உலகங்களை சிருஷ்டித்தார்! சூரியன், சந்திரன் இவைகளோடு, நல்ல சீதோஷ்ண நிலைகளையும், நல்ல கனிவர்க்கங் களையும், மரங்களையும், சேடி, கொடிகளையும் உருவாக்கியிருக்கிறார். அன்புள்ள பரம தகப்பனாக, தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, இரங்குகிறார். மட்டுமல்ல, நாம் அனுபவிப்பதற்கு சகலவிதமான நன்மைகளையும், நமக்குச் சம்பூரணமா கொடுக்கிற ஜீவனுள்ள தேவனாயிருக்கிறார்.

நீங்கள் அவரைப் பார்த்து, மனம் திறந்து, “அப்பா, பிதாவே!” என்று அழைக்க முடியும். உங்களுடையத் தேவைகளை மனம் திறந்து, அவருக்கு அறிவித்து, அவரிடத்திலிருந்து உச்சிதமான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுகிறான். ஆம், நீங்கள் விசுவாசத்தோடு கேட்பீர்களென்றால், நிச்சயமாகவே தேவனுடைய சம்பூரணங்களைப் பெற்றுக் கொள்ளுவீர்கள்.

தேவனுடைய வாஞ்சை என்ன? நீங்கள் குறைவுபட்டு, நஷ்டப்பட்டு, வறுமை யிலே வாட வேண்டும் என்பது அவருடைய சித்தமல்ல; பிரியமுமல்ல. “பிரியமான வனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல, நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும் படி வேண்டுகிறேன்” என்பதே கர்த்தருடைய சித்தமா இருக்கிறது (3 யோவா. 1:2).

ஆகவே, சம்பூரணமாக் கொடுக்கிற தேவனிடத்தில், இன்றைய தேவைகளைக் கேளுங்கள். உங்களுடைய கடன் பிரச்சனை, மாற வேண்டுமா? உங்களுடைய பிள்ளைகள், மேன்மையா உயர்த்தப்பட வேண்டுமா? நீங்கள் நல்ல வேலையில் அமரவேண்டுமா? ஆவியின் வரங்களினாலும், கிருபையினாலும் நிரப்பப்பட வேண்டுமா? ஆத்துமாக்களைக் கர்த்தருக்கென்று, அதிகமா ஆதாயம் சேய வேண்டுமா? சம்பூரணமா கொடுக்கிற தேவனிடத்தில் கேளுங்கள்.

நினைவிற்கு:- “நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத் தில் சகலவித கிருபையையும் பெருகச் சேய வல்லவராயிருக்கிறார்” (2 கொரி. 9:8).