பூரண சமாதானம்!

“உம்மை உறுதியாப் பற்றிக்கொண்ட மனதையுடையவன், உம்மையே நம்பி யிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்” (ஏசாயா 26:3).

“பூரண சமாதானம்” வெளிப்படும்படி, ஓவியம் ஒன்றை வரையும்படி, ஒரு போட்டி நடந்தது. அதில் ஒரு ஓவியர், பச்சை நிறமான மலைகள், சிகப்பு நிறமான பலவகையான பூக்கள், நீல நிறமான ஏரியை வரைந்திருந்தார். ஆனால் மற்ற ஓவியரோ, பயங்கர அலை பாயும் கடலின் நடுவே இருக்கும் பாறையையும், அந்த பாறையில் இனிமையா பாடிக்கொண்டிருக்கிற, ஒரு பறவையையும் வரைந்தார். சுற்றுப்புறத்தில் சீறும் கடலின் அலைகள், பயங்கரமான மின்னல் இருந்தபோதிலும், அந்த பறவையானது, அங்கே அமர்ந்து, பூரண சமாதானமா பாடிக்கொண்டிருந்தது. அந்த ஓவியமே பரிசைப் பெற்றது.

சுற்றமும், சூழலும், கொந்தளித்துக் கொண்டிருந்தாலும், கர்த்தர்மேல் தங்கள் நம்பிக்கையை வைக்கிறவர்கள், பூரண சமாதானமா பாடிக்கொண்டிருப்பார்கள். நம்முடைய தேவனோ, சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார் (1 கொரி. 14:33). அவர் கடலை அதட்டுகிறார்; காற்றை அமரப்பண்ணுகிறார். துஷ்ட மிருகங்கள் சேதப்படுத்தாதபடி, அவைகளை ஒழியப்பண்ணுகிறார். சத்துருக்கள் உங்களோடு சிநேகமாகும்படி உதவி சேகிறார். பூரண சமாதானத்தை தந்திருக்கிறார்.

நீங்கள் சேய வேண்டியது என்ன? உங்களுடைய பிரச்சனையை எண்ணி கலங்கித் தவிக்காமல், கர்த்தரில் சார்ந்து அவருடைய கிருபைகளை நம்பி, உங்கள் பாரங்களை அவர்மேல் இறக்கி வைத்து, இளைப்பாறக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம், உங்களுடைய இருதயத்தை நிரப்பிவிடும்.

தேவபிள்ளைகளே, நீங்கள் சமாதானமா வாழவேண்டும் என்பதுதான் தேவனு டைய பிரியம். நீங்கள் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக வாழவேண்டுமென்பதுதான் அவருடைய சித்தம். “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்” என்று இயேசு சோன்னாரே! (யோவான் 14:1).

மாத்திரமல்ல, உங்களுக்கு சமாதானத்தை உண்டுபண்ணும்படி, சமாதானப் பிரபு உங்களுக்காகத் தன்னையே தந்திருக்கிறார். சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது (ஏசாயா 53:5). உங்களுக்கு சமாதானத்தைத் தருவதற்காகத்தானே, அவர் முள்முடி சூட்டப்பட்டார். கடைசி சோட்டு இரத்தத்தையும், உங்களுக்காக ஊற்றிக் கொடுத்தார். காரணம், நீங்கள் சமாதானமாயிருக்க வேண்டுமென்பது தான். சமாதானத்தைக் கெடுக்கிற வல்லமையை, கர்த்தர் சிலுவையிலே தகர்த்தார். மனச்சாட்சியை வாதிக்கும் பாவத்தை மன்னிக்கச் சித்தமானார். சாபத்தின் முது கெலும்பைத் தகர்த்து, உங்களை விடுதலையுள்ளவர்களாக மாற்றிவிட்டார். அவரே சமாதானக் கர்த்தர். அவரே சமாதானப் பிரபு.

தேவபிள்ளைகளே, எப்போதும் சமாதானத்தைக் காத்துக்கொள்ளுங்கள். அவருடைய சத்தியத்தை நேசிக்கிறவர்களுக்கும், அதன்படி ஜீவிக்கிறவர்களுக்கும் மிகுந்த சமாதானமுண்டு என்று சங்கீதம் 119:165-லே நாம் வாசிக்கிறோம். சமாதானப் பிரபுவாகிய கர்த்தர் தாமே, தெவீக சமாதானத்தை, உங்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரத்தில் நிரப்புவாராக!

நினைவிற்கு:- “உன் சமாதானம் நதியைப்போலவும், உன் நீதி சமுத்திரத்தின் அலை களைப்போலும் இருக்கும்” (ஏசாயா 48:18).