சுவிசேஷத்தின் சம்பூரணம்!

“நான் உங்களிடத்தில் வரும்போது, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் சம்பூரணமான ஆசீர்வாதத்தோடே வருவேனென்று அறிந்திருக்கிறேன்” (ரோமர் 15:29).

சுவிசேஷத்தின் மூலமாக, நாம் பெரிய ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறோம். அவை ஒருபோதும் அரைகுறையானவையல்ல. சம்பூரணமான ஆசீர்வாதங்கள் ஆகும். அந்தச் சுவிசேஷம், கிறிஸ்துவின் பூரணத்திற்கு நேராக, உங்களை வழி நடத்திச் சேல்லுகிறது.

“சுவிசேஷம்” என்பதற்கு “நற்சேதி” என்பது அர்த்தம். இயேசுகிறிஸ்து பிறந்தபோது, தேவதூதன் அந்த நற்சேதியாகிய சுவிசேஷத்தை, முதன்முதல் மேப்பர்களுக்கு அறிவித்தான். ஆயினும்கூட, அது மேப்பர்களுக்கு மட்டுமல்ல, உலகத்தில் பிறந்த அத்தனை பேருக்கும் உரிய நற்சேதியாகும். “இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்சேதியை, உங்களுக்கு அறிவிக்கிறேன்” என்று சோன்னான் (லூக். 2:10).

இந்தச் சுவிசேஷமாகிய நற்சேதியை, அறிவிக்கிறவர்களும், அதைக் கேட்டு அதன்படி சேகிறவர்களும் பாக்கியவான்கள். “சமாதானத்தைக் கூறி, நற்காரியங் களைச் சுவிசேஷமா அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று, சீயோனுக்குச் சோல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள், மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன” (ஏசா. 52:7).

இங்கே சுவிசேஷத்தின் சம்பூரணமாக, நான்கு ஆசீர்வாதங்கள் குறிப்பிடப்பட் டிருக்கின்றன. முதலாவது, சமாதானத்தைக் கூறவேண்டும். இரண்டாவது, நற்காரியங்களை சுவிசேஷமா அறிவிக்க வேண்டும். மூன்றாவது, இரட்சிப்பை பிரசித்தப்படுத்த வேண்டும். நான்காவதாக, தேவன் ராஜரிகம் பண்ணுகிறார் என்று சீயோனுக்குச் சோல்ல வேண்டும். இந்த நான்கும், ஒவ்வொரு விசுவாசிகள் மேலும் விழுந்த கடமையா இருக்கிறது.

இதிலே, முதலாவது வருவது சமாதானம். கர்த்தர் பூரண சமாதானத்தை சுவிசேஷத்தின் சம்பூரணத்திலே, நமக்கு வாக்குப்பண்ணுகிறார் (ஏசா. 26:3). இரண்டாவதாக, நற்கிரியைகளாகிய நற்காரியங்கள். “நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும், பெருகக்சேய வல்லவராயிருக்கிறார்” (2 கொரி. 9:8).

முதலாவது, சுவிசேஷத்தை, மகிழ்ச்சியோடு உங்கள் உள்ளத்தில், ஏற்றுக்கொள்ளுங்கள். இரண்டாவது, சுவிசேஷத்தை, சாட்சியோடு மற்றவர்களுக்கு அறிவியுங்கள். சமயம் வாய்த்தாலும், வாய்க்காவிட்டாலும் பிரசங்கியுங்கள்.

சுவிசேஷத்தின் சம்பூரணமானது, நீங்கள் எல்லாவற்றிலும் வாழ்ந்து, சுகமா இருக்கும்படி, உங்களை வழி நடத்திக்கொண்டே சேல்லுகிறது. அந்த சுவிசேஷம் இயேசுகிறிஸ்துதான். அவரில் இருந்தே சமாதானம், நற்கிரியைகள், இரட்சிப்பு, தெவீக விசுவாசம் என்பவைகள், உங்களுக்குள் கடந்து வருகிறது.

கிறிஸ்துவுக்கு, பூரணமா உங்களுடைய உள்ளத்திலும், வாழ்க்கையிலும் இடம்கொடுக்கும்போது, அவர் சகல சம்பூரணங்களுக்குள்ளும், உங்களை வழி நடத்திச் சேல்லுவார். சம்பூரணமான ஆசீர்வாதங்களை, உங்களுக்குத் தருவதற்காக அவர் ஜீவனுள்ளவராகவும், வல்லமையுள்ளவராகவும் இருக்கிறார்.

நினைவிற்கு:- “உண்மையுள்ள மனுஷன், பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ, ஆக்கினைக்குத் தப்பான்” (நீதி. 28:20).