பூரண பெலன்!

“என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமா விளங்கும் என்றார்” (2 கொரி. 12:9).

கர்த்தரில் பெலன் கொள்கிறவனும், கர்த்தரை பெலனாகக் கொண்டவனும் பாக்கியவான்; வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் பெலன் கொண்டு, கர்த்தரைத் துதித்து மகிழ்ந்தவர் தாவீது. அவர் எழுதுகிறார், “கர்த்தர் என் பெலனும், என் கீதமுமானவர்” (சங். 118:14).

கர்த்தர் எப்பொழுதும் உங்களைப் பெலப்படுத்த ஆவலோடிருக்கிறார். “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்சேய எனக்கு பெலனுண்டு” என்று சோல்லி, பெலன் கொள்ளுங்கள் (பிலி.4:13). உங்களை உன்னத பெலத்தால் நிரப்புகிற பரிசுத்த ஆவியினால், பெலன் கொள்ளுங்கள் (அப். 1:8). வாக்குத்தத்தங்களைப் பற்றிக் கொண்டு, தேவ சமுகத்தில் காத்திருந்து, பெலன்கொள்ளுங்கள் (ஏசா. 40:31).

உங்களை நீங்கள் பெலவீனன் என்றோ, அனாதை என்றோ, படிப்பறிவில்லா தவன் என்றோ எண்ணி ஒருபோதும் சோர்ந்துபோகாதீர்கள். “ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்து கொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்” (1 கொரி. 1:27). தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களைத் தெரிந்தெடுத்து, பரலோக பெலத்தால் நிரப்பியிருக்கிறார்.

தன்னைப் பெலப்படுத்துகிற கர்த்தரைப் பார்த்து, தாவீது நன்றியோடு சோல்லு கிறார், “யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பின வர்களை என் கீழ் மடங்கப்பண்ணினீர். உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாந்து போவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்” (2 சாமு. 22:40,30).

இஸ்ரவேல் ஜனங்களில், பெலவீனமானவர்கள் ஒருவனும் இருந்தது இல்லை. அவர்களை வழிநடத்தின மோசேக்கு, நூற்றி இருபது வயதாகியும் அவருடைய கண்கள் மங்கவும் இல்லை, கால்கள் தள்ளாடவும் இல்லை. காலேப்பைப் பாருங்கள். அவருக்கு எண்பத்தி ஐந்து வயதான போதிலும் அவருடைய பெலன் குறுகவில்லை. எனக்கு அப்பொழுதிருந்த பெலம் இப்பொழுதும் இருக்கிறது. நான் மலைநாட்டை சேன்று பிடிக்கப்போகிறேன் என்றார் (யோசுவா 14:7-11).

இரட்சிப்பிலே உங்களுக்குப் பெலனுண்டு:- இரட்சிக்கப்பட்டதுமே கர்த்தர் உங்களோடிருக்கிறதையும், முழு பரலோகமும் உங்கள் பட்சத்திலிருக்கிறதையும் உடனே உணருவீர்கள். “பெலனான நகரம் நமக்கு உண்டு; இரட்சிப்பையே அதற்கு மதிலும் அரணுமாக ஏற்படுத்துவார்” (ஏசா. 26:1).

வசனத்திலே உங்களுக்குப் பெலனுண்டு:- “சத்திய வசனத்திலும், திவ்விய பலத்திலும், நீதியாகிய வலதிடதுபக்கத்து ஆயுதங்களைத் தரித்திருக்கிறதிலும்…” (2 கொரி. 6:7-10). வேத வசனமே, ஆவியின் பட்டயம் (எபே. 6:17). அது அரண்களை நிர்மூலமாக்குவதற்கு தேவபலமுள்ளதா இருக்கிறது (2 கொரி. 10:4).

பரிசுத்தாவியிலே உங்களுக்குப் பெலனுண்டு:- “பரிசுத்தாவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு” (ரோமர் 15:13) என்று அப்.பவுல் எழுதுகிறார். கர்த்தரே சோன்னார், “பரிசுத்தாவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைவீர்கள்” (அப். 1:8).

நினைவிற்கு:- “அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவ சந்நிதியில் வந்து காணப்படுவார்கள்” (சங். 84:7).