பூரணப்பட்ட கிறிஸ்து!

“தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணரானார்” (எபி. 5:9).

இயேசுகிறிஸ்து பூமியிலே பிறக்கும்போதே, பிதா அவரை பூரணமுள்ளவரா பிறக்கச் சேயவில்லை. பூரணத்திற்காக, அவர் பல பருவங்களுக்கு கடந்து சேல்லவேண்டியதிருந்தது. உலகப்பிரகாரமான பெற்றோருக்கு, அவர் கீழ்ப்படிய வேண்டியதிருந்தது. நமக்கு முன் மாதிரியாக விளங்குவதற்கு, ஞானஸ்நானம் பெற வேண்டியதிருந்தது.

“தாம் பூரணரான பின்பு” என்று எபி. 5:9-லே வாசிக்கிறோம். அவர் பூரணமான பின்பு தான், மற்றவர்களையும் பூரணத்திற்குள்ளே வழி நடத்த, அவர் வல்லமையுள்ளவரா இருந்தார். கிறிஸ்துவைப் பூரணப்படுத்தும்படி, பிதாவானவர் அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார். அவர் அநேக உபத்திரவங் களுக்குள்ளா கடந்து சேன்றார். கல்வாரி மரணமாகிய கசப்பானக் காடியைப் பானம் பண்ணினார். “அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டு வந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது” (எபி. 2:10).

பாருங்கள், சில மரத்துண்டுகளை தச்சனிடம் கொடுத்து, இதை எனக்கு ஒரு அழகான, பூரணமான மேஜையாகச் சேது கொடு என்று சோல்லும்போது, அந்தத் தச்சன் பல பிரயாசங்கள், முயற்சிகளின் மத்தியிலே அதை மேஜையாக உருவாக்கும்படி திட்டமிடுகிறான். அது உளியினால், இழைக்கப்படுகிறது. ஆணிகள் அடிக்கப்படுகிறது. எத்தனையோ பாடுகளின் வழியாகக் கடந்துசேல்ல வேண்டியதிருக்கிறது.

இப்படித்தான் உபத்திரவங்களும், பாடுகளும், கிறிஸ்துவைப் பூரணப்படுத்தியது. உங்களுடைய வாழ்க்கையிலே வீசும் புயல்களும், கொந்தளிப்பும் அப்படியே உங்களை கிறிஸ்துவினுடைய பூரணத்திற்கு நேரா வழி நடத்தும். வீசும் புயல்களே, மரங்களின் வேர்களை ஆழமா பூமிக்குள் கொண்டு சேல்கின்றன. புடமிடப்படுதல், பொன்னை பிரகாசிக்கச் சேகிறது. ஆகவே, சோதனைகளில் சோர்ந்துபோகாதிருங்கள். பாடுகளில் பதறிப்போகாதிருங்கள். அவைகள் உங்களைப் பூரணத்திற்கு நேரா வெற்றி நடைபோடச் சேயும்.

இக்காலத்துப் பாடுகள் இனி உங்களில் வெளிப்படப்போகிற பெரிய மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல. பூமிக்குரிய பாடுகள் எல்லாம், கொஞ்ச காலத்தில் நின்றுபோகும். பூரணராக்கப்பட்ட பின்பு, நித்திய கனமகிமையைக் கொண்டு வரும். யோசேப்பு எத்தனை உபத்திரவத்தின் பாதையிலே நடந்தார். எத்தனை முறை, அநியாயமா குற்றஞ்சாட்டப்பட்டார். எவ்வளவு கொடூரமாச் சிறைச்சாலை யிலே கிடந்து தவித்தார். அவருடைய பிராணன், இரும்பிலே அடைப்பட்டிருந்தது. ஆனால் ஒருநாள் வந்தது. கர்த்தர் அவருடைய எல்லாப் பாடுகளுக்கும் ஒரு முற்றுப் புள்ளி வைத்து, எகிப்திலே பெரிய அதிபதியா உயர்த்தினார். தன் தகப்பனுக்கு ஆறுதலும் தேறுதலும் உண்டாகும்படி, யோசேப்பு அரவணைத்துக் கொண்டார்.

அதுபோலத்தான், கர்த்தருடைய வருகையிலே நீங்கள் மகிமையின்மேல் மகிமையடைவீர்கள். அவருடைய ராஜ்யத்திலே, கிறிஸ்துவுக்குள் மரித்த உறவினர் களையும் கண்டு மகிழுவீர்கள். அந்த நாளின் சந்தோஷம் உங்களுக்குப் பரிபூரணமா இருக்கும்.

நினைவிற்கு:- “உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு” (சங். 16:11).