அசைவ உணவு!

“நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமா இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன்” (ஆதி. 9:3).

கர்த்தர் ஆதாம் ஏவாளை சிருஷ்டித்தபோது, அவர்களுக்கு காகறி உணவையே தந்தார் (ஆதி. 1:29). ஆனால் நோவாவின் காலத்திற்குப் பிறகு மனுக்குலத்திற்கு காகறி சைவ உணவோடுகூட, அசைவ உணவையும் சேர்த்து தந்தருளச் சித்தமானார். பூமியிலே நடமாடுகிற யாவும், சமுத்திரத்தின் மச்சங்களும் உங்களுக்கு ஆகாரமாயிருப்பதாக என்று கர்த்தர் சோன்னார் (ஆதி. 9:2)
மனிதன் தனக்கு இஷ்டமான உணவை, போதுமான அளவு உண்ணும்படி கிருபை பாராட்டியிருக்கிறார். சிலருக்கு கோழிக்கறி இஷ்டம், சிலருக்கு ஆட்டுக் கறி இஷ்டம், சிலருக்கு மீன் என்றால் மிகவும் விருப்பம். சிலர் காகறியே போதும் என்று எண்ணுவார்கள்.

ஒரு முறை மோசேக்கும், ஆரோனுக்கும் விரோதமாக இஸ்ரவேல் ஜனங்கள் முறுமுறுத்து “இந்த வனாந்திரத்தில் யார் எங்களுக்கு அசைவ உணவு தருவார்கள்? இறைச்சி சாப்பிட ஆசைப்படுகிறோம். தினமும் இந்த மன்னா சாப்பிட்டு வெறுப்பா இருக்கிறது” என்று சோன்ன போது, கர்த்தர் அங்கே காற்றை வீசப் பண்ணினார். அந்த காற்று இஸ்ரவேலரின் பாளயத்திலே காடைகளைக் கொண்டு வந்து குவித்தது. அவர்கள் சாப்பிட்டு, வயிறு நிறைந்து, மூக்கு வழியே வருகிற அளவுக்கு உண்டார்கள்.

எலியாவை கர்த்தர் மூன்று விதங்களிலே போஷித்தார். முதலாவது, கர்த்தர் காகங்கள் மூலமாக அசைவ உணவைக் கொடுத்தார். “காகங்கள் எலியாவுக்கு விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டுவந்தது” (1இரா.17:6). இரண்டாவது, கர்த்தர் சாறிபாத் விதவையின் மூலமாப் போஷித்தார். அவளுடைய பானை யிலிருந்த மாவும் கலசத்திலுள்ள எண்ணெயும் பஞ்ச காலமெல்லாம் குறைந்துபோகாமல் இருந்தது (1இரா. 17:13,14). மூன்றாவதாக, கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பி எலியாவைப் போஷித்தார். தேவ தூதன் கொண்டு வந்தது என்ன? இதோ, தழலில் சுடப்பட்ட அடையும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் இருந்தன (1இரா.19:6).
கர்த்தர் அற்புதமா உங்களையும் போஷித்து வழி நடத்துவார். இயேசு சோன்னார், “என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்” (மத்.6:31,32).

ஆண்டவராகிய இயேசு இந்த பூமியில் வாழ்ந்தபோது, ஒருமுறை ஐந்து அப்பத்தையும் இரண்டு மீன்களையும் கொண்டு ஐந்தாயிரம் பேரைப் போஷித்தார். இன்னொரு முறை ஏழு அப்பங்களையும் சில சிறு மீன்களையும் கொண்டு நான்காயிரம் ஜனங்களைப் போஷித்தார். அந்த அசைவ உணவான மீன்கள் பெருகிக்கொண்டிருந்தது. ஜனங்களெல்லாம் திருப்தியாச் சாப்பிட்டார்கள் என்று வேதம் சோல்லுகிறது. இயேசு உயிர்த்தெழுந்த பிறகும்கூட திபேரியா கடற்கரை யிலே சீஷர்களை எதிர்பார்த்து, அவர்களுக்கு உணவை சமைத்து வைத்திருந்தார். அது அசைவ உணவு. “சீஷர்கள் கரையிலே வந்திறங்கினபோது, கரிநெருப்புப் போட்டிருக்கிறதையும், அதின் மேல் மீன் வைத்திருக்கிறதையும், அப்பத்தையும் கண்டார்கள்” (யோவான் 21:9).

நினைவிற்கு:- “நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்” (யோவான் 6:51).