உங்களைப் பற்றிய பயம்!

“உங்களைப்பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள சகல மிருகங்களுக்கும், ஆகாயத் திலுள்ள சகல பறவைகளுக்கும் உண்டாயிருக்கும்” (ஆதி. 9:2).

கர்த்தர் நோவாவின் குடும்பத்தாருக்கு கொடுத்த வாக்குத்தத்தத்தை இன்றைக்கு உங்களுக்குத் தருகிறார். பூமியிலே நடமாடும் யாவும், உங்களுக்கு கையளிக்கப் பட்டன. உங்களைப் பார்க்கும்போது, உங்களைப் பற்றிய பயம் அவைகளுக்கு உண்டாயிருக்கும். நீங்கள் எந்த மிருகத்திற்கும் பயப்பட வேண்டியதில்லை. ஆனால் அவைகள் உங்களைப் பார்த்து பயப்படும்.

ஒருவேளை நீங்கள் கேட்கலாம், எனக்கு நாயைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. ஓடி வருகிற மாட்டைப் பார்த்தால் முட்டி விடுமோ என்று பயமாக இருக்கிறது என்று சோல்லலாம். நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருக்கும்போது, இதைக்குறித்து பயப்படவேண்டிய அவசியமே இல்லை. “தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்” (2 தீமோ. 1:7).

தாவீது சிங்கத்தையும், கரடியையும், கோலியாத்தையும், பெலிஸ்தரையும் தைரியமா எதிர்த்து நின்றதின் இரகசியம் என்ன? தாவீது சோல்லுகிறார், “நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் சேவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கி விட்டார்” (சங். 34:4). “நீதிமான்களோ சிங்கத்தைப் போலே தைரியமாயிருக்கிறார்கள்” (நீதி. 28:1).

பாம்பு உங்களைப் பார்த்து சீறுகிறது என்றால், அது தன்னுடைய வீரத்தினால் சீறுகிறதில்லை. நீங்கள் அதை அடித்து விடுவீர்களோ என்ற பயத்தில், தன்னை பாதுகாக்கவே சீறுகிறது. நீங்கள் பயந்து ஓடுவதினால்தான், நா உங்களைத் துரத்துகிறதே தவிர, எதிர்த்து நின்று கல்லை எடுத்தால் அது ஓடிவிடும். பாருங்கள், பெரிய பெரிய யானைகளை, மனிதன் அடிமையாக்கி, அவைகளை தனக்கு வேலை சேயும்படி கட்டளையிடுகிறான். பெரிய பெரிய மரங்களையும், உத்திரங்களையும் தூக்கிக்கொண்டு மனிதனுக்கு அடிபணிந்து வேலை சேகிறது. பெரிய எருமை மாடுகள் அவனுக்கு வண்டி இழுத்து, ஏர் உழுகிறது.

ஒருவன் பரிசுத்த ஆவியினால் நிரம்பியிருப்பான் என்றால், அந்த வல்லமையினால் மிருகங்களை மட்டுமல்ல, அசுத்த ஆவிகளையும் துரத்த முடியும். சர்ப்பங்களையும், தேள்களையும் மிதிக்கிற வல்லமையை கர்த்தர் கொடுத்திருக்கிறார். “சிங்கத்தின் மேலும் விரியன் பாம்பின் மேலும் நீ நடந்து, பால சிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவா” (சங்.91:13). இயற்கையாகவே கர்த்தர் மனிதனுக்கு கொடுத்திருக்கிற அதிகாரம், வல்லமை ஆளுகையோடு கூட பரிசுத்த ஆவியின் வல்லமையும் இணைந்து சேயல்படும்போது, இன்னும் கர்த்தருக்காக மகிமையான காரியங்களைச் சேய முடியும். “உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்” (1யோ. 4:4).

சாத்தானுக்கு வெற்றியே கிடையாது. கல்வாரி சிலுவையிலே கர்த்தர் அவனுடைய தலையை நசுக்கி, முற்றிலுமாத் தோற்கடித்தார். பிசாசின் கிரியைகளை அழிக்கும் படி வெளிப்பட்ட தேவ குமாரன் அவர் (1யோவான் 3:8). “மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்” (எபி. 2:14,15).

நினைவிற்கு:- “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத் தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்” (மாற்கு 16:17,18).