கொப்பேர் மரம்!

“நீ கொப்பேர் மரத்தால், உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு; அந்தப் பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை உள்ளும், புறம்புமாகக் கீல்பூசு” (ஆதி. 6:14).

கர்த்தர் நோவாவிடம் பேழையை பண்ணச் சோன்னபோது, அதை கொப்பேர் மரத்தால் சேயும்படிச் சோன்னார். உடன்படிக்கைப் பெட்டியைச் சேயும்படி, மோசேக்கு சோன்ன போது, அதைச் சித்தீம் மரத்தினாலே சேயும்படி, கட்டளை யிட்டார். தேவாலயத்தைக் கட்டும்படி, சாலொமோனுக்குச் சோன்னபோது, கர்த்தரு டைய ஏவுதலின்படியே, அவர் கேதுரு மரங்களினால் மச்சு பாவினார். “இயேசு கிறிஸ்து மரித்த சிலுவை, எந்த மரத்தினால் சேயப்பட்டது?” என்று, யாருக்கும் தெரியவில்லை. சில காரியங்களை அவர் வெளிப்படுத்துகிறார். சிலவற்றை இரகசியமாகவே வைக்கிறார் (உபா. 29:29).
கர்த்தர் என்ன சோன்னாலும், அதற்கு, அப்படியே கீழ்ப்படிய வேண்டியது அவசியம். “ஏன் ஆண்டவரே, நான் மாமரத்து பலகைகளை, அல்லது வேப்ப மரத்து கட்டைகளினால் பேழையை சேதால் என்ன?” என்று கர்த்தருக்கு ஆலோசனை கொடுக்கக்கூடாது. நோவாவுக்கு கட்டளையிட்டபடியே நோவா அதைச் சேது முடித்தபோது, கர்த்தர் வானத்தின் மதகுகளைத் திறந்தார், மழை பெதது (ஆதி. 7:11). மோசே கர்த்தருடைய வார்த்தையின்படியே, ஆசரிப்புக் கூடாரத்தைச் சேத போது, “ஒரு மேகம் ஆசரிப்புக் கூடாரத்தை மூடினது; கர்த்தருடைய மகிமை, வாசஸ்தலத்தை நிரப்பிற்று” (யாத். 40:34).

கர்த்தருடைய கட்டளையின்படியே, கர்த்தர் கொடுத்த அதே அளவு மாதிரியின்படி சாலொமோன் தேவாலயத்தைக் கட்டி முடித்தபோது, “கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று” (1இராஜா.8:11). ஆகவே, கர்த்தர் உங்களுக்கு என்ன சோன்னாலும், அதற்கு நூற்றுக்கு நூறு கீழ்ப்படியுங்கள். அப்பொழுது உங்களுடைய சரீரமாகிய ஆலயத்தை, தேவ மகிமை நிச்சயமாகவே நிரப்பும்.
“கொப்பேர் மரத்தால்” ஆண்டவர் பேழையை சேயச் சோன்னது மட்டுமல்ல, அதின் உள்ளும் புறம்புமாக, கீல் பூசும்படி கட்டளையிட்டார். “கீல்” என்பது கிறிஸ்து வினுடைய இரத்தத்திற்கு அடையாளமாகும். ஒரு மனிதனுடைய வெளியரங்கமான வாழ்க்கையில் மட்டுமல்ல, உள்ளான வாழ்க்கையிலும், கிறிஸ்துவின் இரத்தம் பூசப்பட்டு இருக்க வேண்டும். அந்த கீலானது, கொப்பேர் மரத்தை தண்ணீரால் சேதப்படாதபடி பாதுகாத்துக்கொண்டது. கிறிஸ்துவின் இரத்தத்திற்குள்ளே, உங்களுக்கு மிகுந்த பாதுகாப்பும், சிறந்த அடைக்கலமும் உண்டு.

ஜலப்பிரளயம் வந்தபோது, கொப்பேர் மரத்திற்கு வெளியே அழிவும், கூக்குரலும், அழுகையும் இருந்தது. ஆனால் அந்த கொப்பேர் மரத்திற்குள்ளே பாதுகாப்பும், சந்தோஷமும், சமாதானமும், ஜீவனும் இருந்தது. ஒரு சிறிய மரம், மரணத்திற்கும், ஜீவனுக்கும் நடுவாக நின்றது. இன்றைக்கும் கல்வாரி மரமானது அழிந்துபோகிற மக்களுக்கும், ஜீவனை சுதந்தரிக்கிற மக்களுக்கும் நடுவாக நிற்கிறது. சிலுவையாகிய பேழைக்குள் ஓடி வந்துவிடும்பொழுது, உங்களுக்கு நித்திய ஜீவனும், என்றென்றுமுள்ள பரலோக வாழ்வும் உண்டு.

உலகம் அழிவுக்கு நேராத் தீவிரித்துக்கொண்டிருக்கிற இந்த நேரத்தில், கிறிஸ்துவாகிய பேழை, உங்களை அன்போடு அழைக்கிறது. கிறிஸ்துவே வழியானவர். அவரே வாசலானவர். அவரையல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். நீங்கள் உள்ளும் புறம்பும் சேன்று, மேச்சலைக் கண்டடைவீர்கள்.

நினைவிற்கு:- “கர்த்தர் இஸ்ரவேலுக்காக மோசேக்குக் கற்பித்த நியமங்களையும் நியாயங்களையும் சேய நீ கவனமாயிருந்தால் பாக்கியவானாயிருப்பா” (1 நாளா. 22:13).