வெற்றி சிறப்போம்!

“நாம் உடனே போய், அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்; நாம் அதை எளிதா ஜெயித்துக்கொள்ளலாம்” என்றான் (எண். 13:30).

எண்ணாகமம் 13-ல் மோசே, கானான் தேசத்தை வேவு பார்க்க பன்னிரண்டு பேரை அனுப்பினார். அவர்கள் கொண்டு வந்த சேதி, இன்றைக்கு ஆவிக்குரிய உலகத்திலே, நமக்குக் கிடைக்கிற சேதிகளுக்கு ஒப்பாயிருக்கிறது. பன்னிரண்டு பேரில் பத்துபேர் துர்ச்சேதியைக் கொண்டு வந்தார்கள். அது என்ன தெரியுமா? “வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானானை சுதந்தரித்துக் கொள்வது கடினமான காரியம்; கூடாத காரியம்; முடியாத காரியம்” என்பதுதான். இன்றைக்கும் ஆவிக்குரிய உலகில், அநேகம்பேர் இந்தியாவில் எழுப்புதல் வருவது கூடாத காரியமென்றும், சபைகள் உயிர்மீட்சி அடைவது முடியாத காரியம் என்றும், அவிசுவாசத்தோடு சொல்லி, தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

அதே நேரத்தில் மற்ற இரண்டுபேர், அதாவது காலேபும், யோசுவாவும், தேவனுடைய ஆவியைப் பெற்றவர்கள். அவர்கள், விசேஷித்த ஆவியை உடைய வர்கள். தேவனுடைய பெலத்தில் சார்ந்திருப்பவர்களுக்கு, “முடியாது” என்பது, அவர்கள் அகராதியில் இல்லை. அவர்கள் சோன்னார்கள், “நாம் உடனே போ அதைச் சுதந்தரித்துக் கொள்வோம்; நாம் அதை எளிதா ஜெயித்துக் கொள்ளலாம்” என்றார்கள் (எண். 13:30). தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களை இந்தியாவில் நிறுத்தியிருக்கிறார். உங்களுடைய சிந்தனை, விசுவாசம் எப்படியிருக்கிறது? “முடியாது” என்று சோல்லுகிறதா இருக்கிறதா? அல்லது, “முடியும்” என்று சோல்லுகிறதா இருக்கிறதா?

துர்ச்சேதி கொண்டுவந்த பத்துப் பேரோடு நிற்கிறீர்களா? அல்லது காலேப், யோசுவாவோடு நிற்கிறீர்களா? கர்த்தர் பரிசுத்த ஆவியை வாக்குத்தத்தம் பண்ணின போது, அதை வெறும் எருசலேமுக்கும், யூதேயாவுக்கும் மாத்திரம் வாக்குப் பண்ணவில்லை. பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார் (அப்.1:8). அதில் இந்தியாவும், இலங்கையும் உண்டல்லவா? ஆகவே, இயேசு கிறிஸ்துவோடு கிராமங்களிலும், பட்டணங்களிலும் நடந்து திரியுங்கள். சுவிசேஷத்தை, முழுபெலத்தோடு பிரசங்கியுங்கள். கிறிஸ்து உங்கள் மூலமா தேசத்தை சந்திக்க விரும்புகிறார்.

“இயேசு சகல பட்டணங்களையும், கிராமங்களையும், சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோகளையும் நீக்கி, அவர்களைச் சோஸ்தமாக்கினார் (மத். 9:35).

அப்.பவுலின் அனுபவமும் அதுதான். “உங்கள் விசுவாசம் விருத்தியாகும்போது, மற்றவர்களுடைய எல்லைகளுக்குள்ளே சேயப்பட்டவைகளை, நாங்கள் சேததாக மேன்மை பாராட்டாமல், உங்களுக்கு அப்புறமான இடங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கத்தக்கதாக, எங்கள் அளவின்படி, உங்களால் மிகவும் பெருகி, விருத்தி யடைவோமென்று நம்பிக்கையாயிருக்கிறோம்” (2கொரி. 10:16).

நாம் தேசத்தை கர்த்தருக்காக ஆதாயம் சேகிற நேரம் வந்துவிட்டது. எவ்வளவு காலம் நம்முடைய தேசம் இன்னும் காரிருளிலே மூழ்கிக்கிடக்கும்? எவ்வளவு காலம் நம்முடைய மக்கள் காரிருளுக்கு அடிமைகளாகி தவிப்பார்கள்? எவ்வளவு காலம் நம்முடைய தேசத்தின் மக்கள், தங்கள் மேப்பரும் மீட்பருமாகிய கிறிஸ்துவை அறியாமல் இருப்பார்கள்? நாம் தேசத்தை கர்த்தருக்காக சுதந்தரிப்போம்.

நினைவிற்கு:- “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் சேய எனக்குப் பெலனுண்டு” (பிலி. 4:13).