இரத்தத்தினாலே தைரியம்!

“அந்த மார்க்கத்தின் வழியாப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறது” (எபி.10:20).

ஆத்துமாவிலே தைரியம் வருவதற்கு முதலாவது உங்களுடைய மனச்சாட்சி சுத்தமா இருக்கவேண்டும். பாவங்களற நீங்கள் கழுவப்பட்டிருக்க வேண்டும். தேவனிடத்தில், தயையைப் பெற்றிருக்க வேண்டும்.

இங்கிலாந்து நாட்டில், ஒரு முறை சில தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள் பத்து பேரை தெரிந்தெடுத்து, அவர்களுக்கு ஒருவன் தந்தி அடித்தான். “உங்கள் இரகசியங்களெல்லாம் அம்பலமாயின. உங்கள் பயங்கரமான குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு வாரத்திற்குள் நீங்கள் ஊரை விட்டு ஓடிப் போ விட்டால், உங்கள் தலை தப்பும். இல்லாவிட்டால் உங்களுடைய மானம் கப்பல் ஏறிவிடும்” என்று தந்தி அடித்திருந்தான். ஆனால் அந்த தந்தியடித்தவனுக்கு, அவர்கள் என்ன தப்பு சேதார்கள் என்றே தெரியாது. தந்தி வாங்கிய பத்து பேரில், ஒன்பது பேர் ஊரை விட்டே ஓடிவிட்டார்கள். ஒருவர் மாத்திரம் நான் என்ன சேதேன்? ஏன் ஊரை விட்டு ஓட வேண்டும்? என்று தைரியமா நின்றார்.

இயேசுவின் இரத்தம், உங்களுடைய மனச்சாட்சியை சுத்திகரிக்கும்போது, மனச்சாட்சியில் ஒரு தைரியம் உண்டு. “ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்சேயுங் கிருபையை அடையவும், தைரியமாக் கிருபாசனத் தண்டையிலே சேரக்கடவோம்” (எபி.4:16). கிருபாசனத்தண்டை கிட்டிச் சேர நமக்குத் தைரியம் தேவை. பிரதான ஆசாரியன் வருடத்திற்கு ஒரு முறை மகா பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிக்கும்போது, ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால், தன்னை சுத்திகரித்துக் கொண்டு, பலிகளை சேலுத்தி, அதன்பின்பு தான் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிப்பான். அப்பொழுதுதான் மற்றவர்களுக்காக விண்ணப்பம் சேய, அவனால் முடியும்.

தாவீது சோல்லுகிறதைப் பாருங்கள். “உமக்கு முன்பாக விண்ணப்பம் பண்ண, உமது அடியானுக்கு மனத்தைரியம் கிடைத்தது” (1 நாளா.17:25). விண்ணப்பம் பண்ண கூட, உங்களுக்கு ஒரு தைரியம் தேவை. தேவ சமுகத்திற்கு கிட்டிச்சேர உங்களுக்கு தைரியம் தேவை. கிருபாசனத்தண்டை நெருங்கி வந்து உங்களுடைய விண்ணப்பங்களையும், வேண்டுதல்களையும், துதியையும், ஸ்தோத்திரத்தையும் அவருக்கு ஏறெடுக்க தைரியம் தேவை. கிறிஸ்துவின் இரத்தத்தின் புண்ணியத்தால் மாத்திரமே உங்களுக்கு அந்த தைரியம் கிடைக்கிறது.

பேதுருவும், யோவானும் பேசுகிற தைரியத்தைக் குறித்து, பரிசேயர், சதுசேயர் எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள் (அப்.4:13). “சகோதரரே, கோத்திரத்தலைவனாகிய தாவீதைக் குறித்து நான் உங்களுடனே தைரியமாப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்” என்று சோன்னார் (அப்.2:29). அவருடைய ஜெபமெல்லாம், “ஆண்டவரே, உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடு சோல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்சேதருளும்” என்பதாகவே இருந்தது (அப்.4:30).

தேவனுடைய பிள்ளைகளே, எந்த சூழ்நிலையிலும் உங்களுடைய தைரியத்தை இழந்துவிடாதீர்கள். இயேசுவினுடைய இரத்தம், உங்களைச் சுத்திகரித்திருக்கும் என்றால், தைரியமா சுவிசேஷத்தை அறிவியுங்கள். தைரியமா, இயேசுவின் நாமத்தை உயர்த்துங்கள். கர்த்தர் தமது வாக்கையும், வல்லமையையும் உங்களுக்குத் தந்தருளுவார்.

நினைவிற்கு:- “அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திட நம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது” (எபே.3:12).