விசுவாசி!

“கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு, இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல; இது தேவனுடைய ஈவு” (எபேசி. 2:8).

தேவபிள்ளைகளுக்கு கொடுக்கப்படுகிற பல பெயர்களுக்குள்ளே ஒரு பெயர், “விசுவாசி” ஆகும். கிறிஸ்துவை விசுவாசிக்கிறவன் “விசுவாசி.” விசுவாசியாதவன் அவிசுவாசியாயிருக்கிறான். “விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்” (ரோம. 10:17).

சுவிசேஷம் அறிவிக்கப்படும்போது, ஜனங்கள் இயேசுவைக்குறித்து கேள்விப் படுகிறார்கள். அவருடைய வல்லமையையும், மனதுருக்கத்தையும் பற்றி தெரிந்துகொள்கிறார்கள். வேத வசனங்கள், கிறிஸ்துவின்மேல் விசுவாசத்தை உண்டாக்குகிறது. மட்டுமல்ல, சத்திய ஆவியாகிய தேற்றரவாளன் வரும்போது, அவர் பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும் கண்டித்து உணர்த்தி, சகல சத்தியத்துக்குள்ளும் கொண்டு சேல்லுகிறார் (யோவா. 16:8).

நீங்கள் தேவக் கிருபையை உறுதியாப் பற்றிப் பிடித்துக்கொண்டு, பாவ மன்னிப்பைப் பெற்று, இரட்சிக்கப்பட வேண்டும். இரட்சிப்புதான் பரலோகப் பாதையின் முதல் படியாகும். இரட்சிக்கப்படும்போது, நீங்கள் தேவனுடைய பிள்ளைகளா மாறுகிறீர்கள். கர்த்தருடைய வாக்குத்தத்தங்களை உரிமை பாராட்டிப் பெற்றுக்கொள்ளும், சுதந்தரவாளிகளாகி விடுகிறீர்கள். நீங்கள் இரட்சிப்பைப் பெற்றதோடு, திருப்திபட்டுவிடாதிருங்கள். உங்கள் வீட்டாரும் இரட்சிக்கப்பட்டு, கர்த்தருடைய பிள்ளைகளாக, பரலோக பாக்கியத்துக்கு பங்காளிகளா விளங்கும் படி, அவர்களுக்காக ஜெபியுங்கள்.

நான் லண்டனுக்கு போயிருந்தபோது, எனக்கு கார் ஓட்டிக்கொண்டு சேன்ற ஒரு சகோதரன் சோன்னார், “நான் இலங்கையிலே ஒரு இயக்கத்தைச் சேர்ந்த போராளியாயிருந்தேன். அங்கே ஒரு வயதான தாயார் அடிக்கடி என்னிடம், “நீ இயேசுவை ஏற்றுகொள்ள வேண்டும்; அவர்தான் இரட்சிப்பைத் தருகிறவர்” என்று கூறுவார்கள். ஒருநாள் மிகுந்த கோபத்தில், இனி ஒருமுறை என்னிடம் இயேசுவைப் பற்றி சோன்னால், சுட்டுக்கொன்று விடுவேன்” என்றேன். அதற்கு அவர்கள், “சரி தம்பி, ஆனாலும்கூட எப்பொழுதாகிலும் உனக்கு ஆபத்து வரும் போது, இயேசுவை நோக்கி கூப்பிடு. நிச்சயமாக அவர் உன்னைத் தப்புவித்து, இரட்சிப்பார்” என்றார்கள்.

எதிர்பாராதவிதமாக, நான் இராணுவத்தினரிடம் சிக்கி, கொடிய சித்திரவதை செய்து விசாரணைக்காக கொண்டு சேல்லப்பட்டபோது, அந்த தாயாரின் வார்த்தை களை நினைவுகூர்ந்து, இயேசுவை நோக்கி கூப்பிட்டேன். மன்றாடினேன். என்ன ஆச்சரியம்! ஒருவர் இராணுவ தளபதியைப்போல வந்து, என்னைத் தப்பித்து சேல்ல வழிகாட்டினார். இப்படியாக நான் இரட்சிக்கப்பட்டேன் என்று கூறினார்.

தேவபிள்ளைகளே, இன்றைக்கு கோடிக்கணக்கான மக்களுக்கு இயேசு கிறிஸ்து இரட்சிப்பின் அதிபதியாக இருக்கிறார். உங்களுக்கும், உங்களுடைய குடும்பத்தினருக்கும் அவர் இரட்சிப்பை தர விரும்புகிறார். “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப் படுவீர்கள்” (அப்.16:31). தேவபிள்ளைகளே, நீங்கள் விசுவாசிகளென்றால், நீங்கள் பெற்றுக்கொண்ட இரட்சிப்பை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

நினைவிற்கு:- “விசுவாசத்தைக்கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப் பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது” (1 பேது. 1:5).