கர்த்தருடையவர்கள்!

“நான் என் நேசருடையவள், என் நேசர் என்னுடையவர்” (உன்.6:3).

நாம் கர்த்தருடையவர்கள். கர்த்தர் நம்முடையவர். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் போது, அவர் நமக்காக, நம்முடைய பட்சத்தில் இருக்கிறார். நம்மோடிருக்கிறார். நமக்குள்ளிருக்கிறார். இதுதான் கிறிஸ்துவை பூரணமா அநுபவிப்பதாகும்.

அமெரிக்கா தேசம், சுதந்திரம் பெற்று குடியரசானபோது, குடியரசு என்றால், என்ன? என்பதை ஆபிரகாம் லிங்கன் தன் மக்களுக்குத் தெளிவுபடுத்தினார். “ஜனங்களால்” “ஜனங்களுக்காக”, “ஜனங்களைக் கொண்டு” ஆட்சி சேவதே குடியரசாகும். அதுபோலவே, கிறிஸ்தவ வாழ்க்கையும் அமைந்திருக்கிறது. கர்த்தர் நமக்காக இருக்கிறார். நம்மோடிருக்கிறார். நமக்குள்ளிருக்கிறார்.

முதலாவதாக, தேவன் நமக்காக இருக்கிறார். “தேவன் நம்முடைய பட்சத்தில் இருந்தால், நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? (ரோமர் 8:31). பிதாவானவர் நமக்காகவே இருக்கிறார். நமக்காக வழக்காடுகிறார். நமக்காக யுத்தம் சேகிறார். நமக்காக யாவையும் சேது முடிக்கிறார் (சங். 138:8).

இரண்டாவதாக, தேவன் நம்மோடிருக்கிறார். அவர்தாம் இம்மானுவேலர். “இம்மானுவேல் என்பதற்கு, தேவன் நம்மோடிருக்கிறார்” என்பது அர்த்தமாகும். அவர் ஒருநாளும் நம்மைவிட்டு விலகுவதுமில்லை; கைவிடுவதுமில்லை (யோசுவா 1:5). குமாரனாகிய இயேசுகிறிஸ்து, “உலகத்தின் முடிவு பரியந்தம், சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என்று வாக்களித்திருக்கிறார் (மத்.28:20).

மூன்றாவதாக, பரிசுத்த ஆவியானவர், உங்கள் சரீரத்தை ஆலயமாக்கி, உங்களுக்குள் வாசம் சேகிறார். பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள் (யோவான். 14:17). “உங்கள் சரீரமானது, நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிற தென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?” (1கொரி.6:19). “தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே” (2 கொரி. 6:16).

பிதாவாகிய தேவன் பரலோகத்தில் வாசம்பண்ணினாலும், அவர் உங்களுக் காக இருக்கிறார். குமாரனாகிய இயேசு உங்களோடே இருக்கிறார். பரிசுத்த ஆவியானவராகிய தேவன் உங்களுக்குள் இருக்கிறார். ஆகவே, உங்கள் ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதும், இயேசுகிறிஸ்து வரும்போது, பரிசுத்தமா பாதுகாக்கப்படட்டும். தேவன் பரிசுத்தமுள்ளவர். “நான் பரிசுத்தராயிருக்கிறது போல நீங்களும் பரிசுத்தராயிருங்கள்” என்று அவர் கட்டளையிட்டிருக்கிறாரே.

தேவபிள்ளைகளே, பரிசுத்தமுள்ள தேவாதி தேவனை உரிமை பாராட்டி, “நான் அவருடையவள்; அவர் என்னுடையவர்” என்று சோல்லுங்கள். அவர் முற்றிலும் உங்களுடையவர். அவருடைய வல்லமையும் உங்களுடையது. அவருடைய கிருபை உங்களுடையது. அவருடைய ஆசீர்வாதங்கள் உங்களுடையது. அதுபோலவே உங்களை முற்றிலும், அவருடைய கரத்தில் சமர்ப்பித்து விடுங்கள். உங்கள் ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதும் அவருடையதாயிருக்கட்டும். உங்களுடைய எண்ணங்கள் சிந்தைகள் அவரால் வழிநடத்தப்படுகிறதாயிருக்கட்டும். உங்கள் சோல்லும், சேயலும் அவருக்குப் பிரியமானதா காணப்படட்டும்.

நினைவிற்கு:- “நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் சேயப்படும்” (யோவான் 15:7).