தேவ ஜனம்!

“அன்றியும், உன்னை விசேஷித்தவனாகும்படி செய்கிறவர் யார்? உனக்கு உண்டா யிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? நீ பெற்றுக்கொண்டவனானால், பெற்றுக் கொள்ளாதவன்போல், ஏன் மேன்மைபாராட்டுகிறாய்?” (1 கொரி. 4:7).

கர்த்தர் நம்மை தேவ ஜனமாக, கர்த்தரின் பங்காக, ஆவிக்குரிய இஸ்ரவேலராக, இரட்சிக்கப்பட்ட ஜனமாக தெரிந்துகொண்டார். இந்த உலகத்தில் ஆயிரக்கணக்கான ஜாதிகளும், ஜனங்களும், தேச மக்களும், பாஷைக்காரரும் வாழுகிறார்கள். ஆனால் அவர், ஒரு கூட்டம் ஜனங்களை மட்டுமே, தமக்கென்றும், தம்முடைய நாம மகிமைக்கென்றும் தெரிந்துகொண்டு, என் ஜனமென்று உரிமை பாராட்டுகிறார். ஆம், உங்களுக்குக் கர்த்தர் கொடுத்திருக்கிற பெயர் “தேவ ஜனம்” என்பதாகும்.

தேவ ஜனத்தின் முதல் ஆசீர்வாதம், கர்த்தரையே சுதந்திரமா பெறுவதாகும். கர்த்தருக்குள்ள சகல ஆசீர்வாதங்களையும் பெற்று அனுபவிப்பதாகும். “கர்த்தரு டைய ஜனமே அவருடைய பங்கு; யாக்கோபு அவருடைய சுதந்தர வீதம்” (உபா. 32:9). கர்த்தர் உங்களைப் பார்க்கும்போது, மேன்மையுள்ளவர்களாக பார்க் கிறார். பாக்கியவான்களாகப் பார்க்கிறார். மற்ற யாருக்கும் ஈடு இணையில்லாத ஜனங்களாகப் பார்க்கிறார்.

அவர் இன்றைக்கும் அன்போடு உங்கள் கரத்தைப் பிடித்து, “இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்சேயும் கேடகமும், உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பா” (உபா. 33:29) என்று சோல்லுகிறார். கர்த்தர் உங்களுக்குத் தருகிற வாக்குத்தத்தத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள். “தேவனே, என்னை உமது பிள்ளையாக மட்டுமல்ல, உம்முடைய ஜனமாகவும், என்னைச் சேர்த்து அணைத்துக் கொண்டதற்காக நன்றி” என்று சோல்லுங்கள்.

தேவ ஜனத்திடம் கர்த்தர் எதிர்பார்க்கும் முக்கியமான மூன்றுண்டு. முதலாவது, நீங்கள் கர்த்தருடைய வார்த்தைகளுக்கு சேவிகொடுக்க வேண்டும். அவைகளை கவனமா கேட்க வேண்டும் (சங். 50:7; சங். 81:8). “நான் வானத்தை நிலைப் படுத்தி, பூமியை அஸ்திபாரப்படுத்தி, சீயோனை நோக்கி: நீ என் ஜனமென்று சோல்லுவதற்காக, நான் என் வார்த்தையை உன் வாயிலே அருளி, என் கரத்தின் நிழலினால் உன்னை மறைக்கிறேன்” (ஏசா. 51:16) என்றார்.

இரண்டாவதாக, தேவ ஜனமாயிருக்கிறவர்களிடத்தில் கர்த்தர் பரிசுத்தத்தை எதிர்பார்க்கிறார். “உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே” (1 பேதுரு 1:15,16). “அவர்களைப் பரிசுத்த ஜனமென்றும், கர்த்தரால் மீட்கப்பட்டவர் களென்றும் சோல்லுவார்கள்; நீ தேடிக் கொள்ளப்பட்டதென்றும், கைவிடப்படாத நகரமென்றும் பெயர்பெறுவா” (ஏசா. 62:12).

மூன்றாவதாக, தேவ ஜனங்கள், தேவனைத் தொழுதுகொள்ள வேண்டும். ஆராதிக்க வேண்டும். கர்த்தர் சோல்லுகிறார், “அவர்கள் என் நாமத்தைத் தொழுது கொள்வார்கள்; நான் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்பேன்; இது என் ஜனமென்று நான் சோல்லுவேன், கர்த்தர் என் தேவன் என்று அவர்கள் சோல்லுவார்கள்” (சகரி. 13:9).

நினைவிற்கு:- “இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சோல்லிவருவார்கள்” (ஏசா. 43:21).