தேவதூதரிலும் விசேஷித்தவர்கள்!

“அவர் தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல், ஆபிரகாமின் சந்ததிக்கு உதவியாகக் கைகொடுத்தார்” (எபி. 2:16).

நீங்கள் யார்? ஆபிரகாமின் சந்ததி. தேவதூதரிலும் விசேஷித்தவர்கள். சிருஷ்டிப்பிலே தேவதூதர்கள் மேன்மையானவர்கள்தான். அவர்கள் பலமுள்ள சௌரியவான்கள். வேகமாக பறந்து சேல்லக்கூடியவர்கள். ஆனால், கர்த்தரோ நம்மை தேவதூதர்களிலும், விசேஷித்தவர்களா மாற்றியிருக்கிறார்.

விசேஷமுள்ள நமக்கு, கர்த்தர் தேவதூதர்களை பணிவிடை ஆவிகளாகக் கொடுத்திருக்கிறார். பணிவிடை ஆவிகள் என்றால் என்ன? நமக்கு வேலைக்காரரைப்போல உதவி சேது, பாதுகாக்கிற தேவதூதர்கள். வேறு வார்த்தையில் சோல்லப்போனால், நமக்கு வேலை சேது தரும் பணிவிடைக்காரர்கள். வேதம் சோல்லுகிறது, “இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களின் நிமித்தமாக ஊழியஞ்சேயும்படிக்கு, அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளா இருக்கிறார்கள் அல்லவா?” (எபி. 1:14).

தேவதூதர்கள் நம்மைப் பாதுகாக்கிறார்கள். நம்முடைய வழிகளில் எல்லாம் நமக்குத் துணை நிற்கிறார்கள். நமது கால் இடறிவிடாதபடி, தங்கள் கரங்களில் ஏந்துகிறார்கள். இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு தேவபிள்ளைகளுக்கும் உதவி சேயும்படி, ஏறக்குறைய நாற்பதாயிரம் தேவதூதர்கள் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ஒரு ஊழியர் கூறினார். “நாற்பதாயிரம் தேவதூதர்கள்” படைசூழ நீங்கள் முன்னேறிச் சேல்லும்போது, கர்த்தர் உங்களை எத்தனை விசேஷமுள்ளவர்களாயிருக் கிறார் என்பதை உணர்ந்து, உங்கள் இருதயம் மகிழ்ந்து துதிக்கட்டும்.

தேவதூதர்களையும், மனுஷர்களையும் ஒன்றாக நிறுத்திச் சிந்தித்துப் பாருங்கள். தேவதூதர்களில் ஒரு கூட்டத்தார் பாவம் சேது விழுந்தார்கள். மனுக்குலம் அப்படியே பாவத்தில் விழுந்தது. ஆனால், ஆண்டவர் யாருக்கு கை கொடுத்தார்? மனுஷனுக்கு அல்லவா? விழுந்த மனிதனையே தூக்கி எடுத்து நிலைநிறுத்த, கர்த்தர் தாமே இந்த உலகத்திற்கு இறங்கி வந்தார். மனிதனோடு உண்டு உறங்கி, கைகோர்த்து ஊழியம் சேதார். தான் சிருஷ்டித்த மனிதனுக்கா, கர்த்தர் யாவையும் செய்து முடிக்கிறார். தேவனுடைய பிள்ளைகளே, உங்களை தனது விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்டெடுத்து, விலையேறப்பெற்றவர்களா கர்த்தர் மாற்றியிருக்கிறாரே, நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?

எந்த தேவதூதனுக்காகவும், கிறிஸ்து பிதாவினிடத்திலே பரிந்து பேசவில்லை. ஆனாலும், நமக்காக வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடும், கண்ணீரோடும் இடைவிடாமல் பரிந்து பேசிக்கொண்டே இருக்கிறார், மன்றாடிக்கொண்டே இருக்கிறார். நமக்காக மீண்டும் வருவேன் என்று அவர் வாக்களித்திருக்கிறார். எத்தனை பெரிய பாக்கியம்!

கர்த்தர் எந்த தேவதூதனையும் கனத்தினாலும், மகிமையினாலும் முடிசூட்ட வில்லை. ஆனால், நம்மையோ மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டியிருக் கிறார். தம்முடைய கரத்தின் கிரியைகளின் எல்லாவற்றின்மேலும் நம்மை அதிகாரி யா வைத்திருக்கிறார் (சங். 8:5,6). தேவதூதர்களுக்குக் கொடுக்காத கிரீடங்களை, நமக்கு வாக்குப்பண்ணியிருக்கிறார் அல்லவா? மகிமையின் கிரீடம், நீதியின் கிரீடம், ஜீவகிரீடம் ஆகியவைகள் நமக்காக வைக்கப்பட்டிருக்கிறதே. தேவபிள்ளைகளே, நீங்கள் விசேஷித்தவர்கள்! விசேஷித்தவர்கள்தான்!!

நினைவிற்கு:- “தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக் காரரை அக்கினி ஜுவாலைகளாகவும் சேகிறார்” (எபி. 1:7).