விசேஷ சிருஷ்டிப்பு!

“நற்கிரியைகளைச் சேகிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய சேகையாயிருக்கிறோம்” (எபே. 2:10).

நாம் தேவனுடைய சேகையா இருக்கிறோம். இதே வசனம் ஆங்கில மொழி பெயர்ப்பு ஒன்றிலே நீங்கள் தேவனுடைய “விசேஷ சிருஷ்டிப்பா இருக்கிறீர்கள்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. வேறு ஒரு மொழிபெயர்ப்பு, “நீங்கள் தேவனுடைய “விசேஷ பாடல்களாக இருக்கிறீர்கள்” என்று குறிப்பிடப்பட்டிருக் கிறது. எல்லாவற்றையும் சேர்த்து வாசித்துப் பார்ப்போமானால், நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய சேகையா இருக்கிறோம். விசேஷ சிருஷ்டிப்பா இருக்கிறோம். விசேஷ பாடல்களாக இருக்கிறோம்.

தேவபிள்ளைகளே, உங்களை நீங்கள் ஒருபோதும் சாதாரணமானவர்களாகவோ, அற்பமானவர்களாகவோ எண்ணி, உங்களை தாழ்த்திக்கொள்ளாதிருங்கள். நீங்கள் கிறிஸ்துவுக்குள் வேறுபிரிக்கப்பட்டு, விசேஷமுள்ளவர்களா இருக்கிறீர்கள். நீங்கள் சாதாரணமானவர்கள் அல்ல. விசேஷமானவர்கள். நீங்கள் அற்பமானவர்கள் அல்ல, அற்புதமானவர்கள்!

மந்தையிலே, ஏதோ, ஒரு ஆடாக இருக்கும் நிலையை விட்டுவிடுங்கள். மந்தையிலுள்ள ஒரு சேம்மறி ஆட்டுக்கு முன்பாக, ஒரு கோலை நீட்டினால் முதலில், ஒரு ஆடு தாண்டிச் சேல்லும். பின்பு அதைப் பார்த்ததும், மற்ற எல்லா ஆடுகளும் ஒன்றன்பின் ஒன்றாக தாண்டிச் சேல்ல ஆரம்பிக்கும். பின்பு அந்தக் கோலை எடுத்துவிட்டாலும்கூட, அது மந்தையின் சுபாவத்தின்படி, குருட்டாட்ட மா தாண்டிச் சேன்றுகொண்டே இருக்கும். ஏன் தாண்டுகிறோம்? எதற்காக தாண்டுகிறோம்? என்று அவை எண்ணிப் பார்ப்பதில்லை. இன்றைக்கும் அநேக கிறிஸ்தவர்கள் இப்படித்தான்! மந்தை சுபாவத்தோடு, சேம்மறி ஆடுகளைப் போல, தாவிக்கொண்டிருக்கிறார்கள்.

அன்றைக்கு சமாரியாவை அரசாட்சி சேத, ஆகாப் ராஜாவின் மனைவி, பாகாலை பின்பற்றியபோது, இஸ்ரவேலரும் மந்தை மந்தையாக பாகாலைப் பின்பற்றி, சோரம்போனார்கள். கர்த்தருடைய விசேஷமான அன்பை மறந்தார்கள். கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தங்களை மறந்தார்கள். மந்தை சுபாவம் உள்ள இஸ்ரவேலர் மத்தியிலே எலியா தீர்க்கதரிசியோ, கர்த்தருக்காக வைராக்கியமா எழும்பினார். 450 பாகால் தீர்க்கதரிசிகளை தனிமையாக எதிர்த்து நின்றார். “அக்கினியால் உத்தரவு அருளுகிற தேவனே தேவன்” என்று நிரூபித்துக் காண்பித்தார். அவருடைய வாழ்க்கை, எத்தனை விசேஷமானது! நம்மைக் கட்டி எழுப்பி, கர்த்தருக்காக வைராக்கியம் கொள்ளச் சேகிறது.

அதுபோலவே, இஸ்ரவேலர்கள் தங்களுக்காக பொன்னினால், ஒரு கன்றுக் குட்டியை உருவாக்கி, அதை வணங்க ஆரம்பித்தார்கள். ஆனால் மோசேயோ, அதற்கு சேவிசாக்காமல், அதை உடைத்து சுட்டெரித்து பொடியாக்கி, இஸ்ரவேலரைக் குடிக்கும்படிச் சேதார். எத்தனை வைராக்கியமா சேதார்! காரணம், தான் விசேஷமானவர் என்பதை மோசே நன்கு அறிந்திருந்தார்.
தேவபிள்ளைகளே, நம்முடைய கர்த்தர் விசேஷமானவர் ஆனபடியால் நாமும் விசேஷமுள்ளவர்களா இருக்கிறோம். அவர் பெரியவர் ஆனபடியினால் நாமும் கர்த்தருக்காக பெரிய காரியங்களைச் சேவோம். அவர் சர்வ வல்லவரானபடியால், நாமும் அவருக்காக, வல்லமையான காரியங்களைச் சேய முடியும்.

நினைவிற்கு:- “நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்கள்” (கலா. 3:26).