பாக்கியமான பிள்ளைகள்!

“உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளு டைய சமாதானம் பெரிதாயிருக்கும்” (ஏசா. 54:13).

கர்த்தர் உங்களோடு மாத்திரமல்ல, உங்களுடைய பிள்ளைகளோடும், சந்ததியா ரோடுங்கூட, உடன்படிக்கை சேதிருக்கிறார். கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தங்களை உங்களுக்காகவும், உங்களுடைய பிள்ளைகளுக்காகவும், உரிமை பாராட்டி சுதந்தரித்துக்கொள்ள வேண்டும்.

சகோதரி மெர்லின் ஹைக்கி, தன்னுடைய ஒவ்வொரு பிள்ளையும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு இருக்கவேண்டும் என்று விரும்பினார்கள். ஒருநாள் அவர்களுடைய நான்கு வயது சிறுமி அவர்களிடம் வந்து, “அம்மா, இன்று நான் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படப்போகிறேன். கர்த்தர் என்னை இப்போதே அபிஷேகிப்பார்” என்று சோன்னாள்.

அந்த தாக்கோ, அது சந்தேகமாகவே இருந்தது. கர்த்தர் எட்டு, அல்லது ஒன்பது வயதிலோ, அல்லது பதினாறு, பதினேழு வயதிலோ இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் பெற்ற பின்பு, அபிஷேகிப்பார் என்று எண்ணியிருந்தார்கள். ஆனால், அந்த மகள் விசுவாசத்தோடு தொடர்ந்து சோன்னாள், “அம்மா, நான் படுத்துக் தூங்கப்போகிறேன். நான் எழுந்திருக்கும்போது, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவேன்” என்றாள். தாக்கோ மிகவும் ஆச்சரியமாக இருந்தது. “அது எப்படி அவ்வளவு உறுதியா சோல்லுகிறா?” என்று கேட்டார்கள். அதற்கு அந்த சிறுமி, “நான் அந்நிய பாஷை பேசும்போது, அதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்” என்றாள்.

என்ன ஆச்சரியம்! இரண்டு மணிநேரம் குழந்தை தூங்கி எழுந்தபோது, முழங்காலில் நின்று, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, அந்நிய பாஷையில் பேசிக் கொண்டிருக்கிறதை, அந்தத் தா கண்டார்கள். தாயின் சந்தோஷத்திற்கு அளவே யில்லை. “வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்களுடைய பிள்ளை களுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டா யிருக்கிறது” என்று வேதம் சோல்லுவது எத்தனை உண்மை! (அப். 2:39).

பரிசுத்த ஆவியை, கர்த்தர் தம்முடைய சீஷர்களுக்கு வாக்குப்பண்ணினார். எருசலேமில் மேல்வீட்டறையில் காத்திருந்த, ஒவ்வொருவர் மேலும் பரிசுத்த ஆவியை பொழிந்தருளினார். ஆனால், அந்த வாக்குத்தத்தம் பெரியவர்களுக்கு மட்டுமல்ல, நம்முடைய பிள்ளைகளுக்கும் சேர்த்துத்தான், கர்த்தர் பரிசுத்த ஆவியை வாக்குப்பண்ணியிருக்கிறார். கர்த்தர் யோவான் ஸ்நானகனை, அவனுடைய தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே, பரிசுத்த ஆவியினால் நிரப்பியிருந்தார். ஆகவே, மரியாள் வந்து எலிசபெத்தை வாழ்த்தினபோது, எலிசபெத்தின் வயிற்றில் இருந்த குழந்தை களிப்பா துள்ளிற்று. உங்கள் பிள்ளைகளைக் கர்த்தர் கருவிலேயே அபிஷேகிக்க வல்லமையுள்ளவராக இருக்கிறார். காரணம், அவர் உங்களோடும், உங்களுடைய பிள்ளைகளோடும் உடன்படிக்கை சேதிருக்கிறார்.

“உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள். உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதா இருக்கும்” (ஏசா. 54:13) என்று கர்த்தர் சோல்லுவது எத்தனை உண்மையானது! தேவபிள்ளைகளே, உங்கள் பிள்ளைகள் கர்த்தரால் இரட்சிக்கப்படுவது மாத்திரமல்ல, அபிஷேகிக்கப்படுவது மாத்திரமல்ல, நித்தியத்திலும் மகிமையா அவர்கள் காணப்பட வேண்டும். உங்கள் பிள்ளைகளை பாக்கியமான பிள்ளைகளாக தேவன் மாற்றும்படியாக, பாரத்தோடு அனுதினமும் ஜெபிப்பீர்களா?

நினைவிற்கு:- “என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப் படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை” (3 யோவான் 1:4).