தகப்பனோடிருக்கும் மகன்!

“மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறா, எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதா யிருக்கிறது” (லூக். 15:31).

நீங்கள் யார்? தேவனுடைய பிள்ளைகள். கர்த்தர் யார்? அவர் உங்கள்மேல் அன்புள்ள பரம தகப்பன். பரம தகப்பனுக்கும், கர்த்தருடைய பிள்ளைகளாகிய உங்களுக்கும் இடையிலுள்ள இந்த உறவு எந்த சூழ்நிலையிலும் பாதிக்கப்படவே கூடாது. உலகத்தில் ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் மேன்மையான அன்பு, தாயின் அன்பு. அடுத்த மேன்மையான அன்பு, தகப்பனுடைய அன்பு. தாயும் தகப்பனும் கர்த்தரிடத்திலிருந்து கிடைக்கும் பெரிய ஆசீர்வாதமாகும்!

ஒரு மனிதனுக்கு, தன்னுடைய தாயையும், தகப்பனையும் தெரிந்தெடுக்கும் உரிமை இல்லை. அவன் ஒரு வேளை தனக்கு ஒரு நண்பனை தெரிந்தெடுக்கலாம். வாழ்க்கைத் துணையை தெரிந்தெடுக்கலாம். வேலைகளைத் தெரிந்தெடுக்கலாம். ஆனால் தகப்பனும், தாயும் தேவனால் கொடுக்கப்பட்டவர்கள். ஆனால் பரம பிதாவை உங்கள் தெய்வமாக ஏற்றுக்கொள்ளும் உரிமை உங்களுக்குண்டு.

ஒரு குடும்பத்தில், குழந்தை பிறக்கும்போது, அவர்கள் குழந்தையின் மேல் அளவற்ற அன்பை சேலுத்துகிறார்கள். உயிரைக் கொடுத்து பராமரிக்கிறார்கள். கண்ணும் கருத்துமா வளர்க்கிறார்கள். குழந்தையிடம் ஒன்றையும் எதிர் பார்க்காமல், எல்லாவற்றையும் தியாகமா கொடுக்கிறார்கள். தகப்பன், தாயினு டைய உள்ளத்தில் அத்தனை அன்பு வைத்த ஆண்டவர், தம்முடைய உள்ளத்தில், எவ்வளவு அதிகமான அன்பை வைத்திருப்பார்! அவர் உங்களைப் பார்த்து, அன்போடு சோல்லுகிறார்: “மகனே, நீ எப்போதும் என்னோடு இருக்கிறா எனக்குள்ளதெல்லாம் உனக்குரியதாயிருக்கிறது.”

நீங்கள் கர்த்தருக்குக் கொடுப்பது, உங்களுடைய சின்ன இருதயத்தைத்தான். ஆனால் கர்த்தர் உங்களுக்குக் கொடுப்பதோ, அவருக்குரிய எல்லாமாகும். அவர் உங்களுக்கு இரட்சிப்பைத் தருகிறார், தெவீக சுகத்தை தருகிறார், பரிசுத்த ஆவியை தருகிறார், சமாதானத்தை தருகிறார், நித்திய ஜீவனைத் தருகிறார், பரலோக வாசஸ்தலங்களைத் தருகிறார், ஜீவகிரீடங்களைத் தருகிறார். அப்பப்பா, அவர் தருவது எவ்வளவு அதிகமாயிருக்கிறது! எவ்வளவு மேன்மையுள்ளதா இருக்கிறது! ஆம், நீங்கள் தேவனுடைய பிள்ளைகள், ராஜாதி ராஜாவின் பிள்ளைகள். உன்னதமான தேவனுடைய பிள்ளைகள்.

அதை எண்ணிய ஏசாயா தீர்க்கதரிசி, ஆச்சரியப்பட்டு எழுதுகிறார்: “தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் சேபவைகளை, நீரேயல்லாமல் உலகத் தோற்றம் முதற்கொண்டு ஒருவரும் கேட்டதுமில்லை, சேவியால் உணர்ந்தது மில்லை, அவைகளைக் கண்டதுமில்லை” (ஏசா.64:4). நீங்கள் சர்வ வல்லவரின் பிள்ளைகள், ராஜாதி ராஜாவின் பிள்ளைகள் என்கிற சந்தோஷத்தோடும், விசுவாசத் தோடும், தலைநிமிர்ந்து நடவுங்கள். அவர்மேல் விசுவாசமுள்ளவர்களாகி, அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார் (யோவான் 1:12).

மாத்திரமல்ல, அவரை “அப்பா பிதாவே” என்று அழைக்கிற புத்திர சுவிகார ஆவியையும் அவர் உங்களுக்குத் தந்திருக்கிறார். “நாம் தேவனுடைய பிள்ளைகளா யிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார். நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே” (ரோம. 8:16,17).

நினைவிற்கு:- “எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்” (ரோமர் 8:14).